இலட்சுமி சந்த் குப்தா
இலட்சுமி சந்த் குப்தா (Laxmi Chand Gupta) என்பவர் ஓர் இந்திய மருத்துவர் ஆவார். கதிரியக்க நிபுணர், எழுத்தாளர் மற்றும் விளையாட்டு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இவர் அறியப்பட்டார்.[1] இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் மருத்துவ இயக்குநராகப் பணிபுரிந்தார். சார்க் இலக்கிய விருது மற்றும் மருத்துவ பிரிவில் வழங்கப்படும் மிக உயர்ந்த இந்திய விருதான பிதான் சந்திரா ராய் விருது உட்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.[2] மருத்துவ அறிவியலில் குப்தாவின் சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ பட்டம் 2010 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[3]
இலட்சுமி சந்த் குப்தா Laxmi Chand Gupta | |
---|---|
பிறப்பு | குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா | 10 சூலை 1939
இறப்பு | 26 மே 2010 புது தில்லி | (அகவை 70)
மற்ற பெயர்கள் | இலக்காவ் |
பணி | மருத்துவர், மருத்துவ எழுத்தாளர் |
அறியப்படுவது | விளையாட்டு மருத்துவம் |
பெற்றோர் | பி/கே.குப்தா |
வாழ்க்கைத் துணை | குசும் குப்தா |
பிள்ளைகள் | மரு. ஆதித்தாப் குப்தா, மரு. அபிசேக் குப்தா |
விருதுகள் | பத்மசிறீ பி.சி.ராய் விருது குடியரசுத் தலைவரின் காவலர் விருது இந்திய மருத்துவச் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது சார்க் இலக்கிய விருது |
வாழ்க்கை வரலாறு
தொகுஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான மத்திய பிரதேசம் குவாலியரில் 1939 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதி இலட்சுமி சந்த் குப்தா பிறந்தார். 1966 ஆம் ஆண்ட்டு குவாலியரிலுள்ள யிவாயி பல்கலைக்கழகத்தின் கயாரா ராசா மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். மேலும் 1968 ஆம் ஆண்டு கதிரியக்கவியல் முதுகலை மருத்துவப் படிப்பை முடித்தார். 1972 ஆம் ஆண்டில் சமூதாயம் மற்றும் தடுப்பு மருந்துத் துறையில் பட்டம் பெற்றார்.[2] குப்தா 1966 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து மருத்துவ இயக்குநராகவும் 1997 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பொது ஆய்வாளராகவும் பணியாற்றினார். மேலும் ஈரானின் அகுவாசு நகரில் கதிரியக்கவியலாளராக 1975 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[2]
குப்தா விளையாட்டு மருத்துவத்தில் நிபுணராகவும் மற்றும் இந்திய விளையாட்டு மருத்துவ சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[4] மேலும் குப்தா ஒரு சிறந்த எழுத்தாளராக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ புத்தகங்களை எழுதி உள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் மற்றும் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ புத்தகங்களை எழுதியவர் என்ற உலக சாதனையை இவர் படைத்தார்.[5]. முதலுதவி கையேடு, பொதுவான காயங்கள் மேலாண்மை, விளையாட்டு காயங்களும் ஊட்டச் சத்துகளும்[6], அக்குபிரசரின் அதிசய விளைவுகள்,[7] மருத்துவ அவசரகால சிகிச்சைகளின் கையேடு[8] ,உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புடன் வாழ்வது எப்படி போன்றவை குப்தா எழுதிய குறிப்பிடத்தக்க புத்தகங்களாக கருதப்படுகின்றன.[9] இவர் பல மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இந்திய மருத்துவ வர்த்தமானி மற்றும் மருத்துவ பயிற்சி இதழின் தற்போதைய ஆலோசனைக் குழுக்களில் ஓர் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2]
குப்தா 2006 ஆம் ஆண்டு மருத்துவ அறிவியல் கழகத்தின் சக உறுப்பினர் ஆவார். இந்திய அரசின் மிக உயர்ந்த விருதானபிதான் சந்திரா ராய் விருது 1988 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் சார்பாக குப்தாவுக்கு வழங்கப்பட்டது.[5] மேலும் குடியரசு காவலர் பதக்கம் 1993 ஆம் ஆண்டும் மற்றும் ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விருதையும் பெற்றார். 2002 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் மத்திய பிரதேச மாநிலத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சார்க் இலக்கிய விருது போன்ற பல விருதுகளையும் பெற்றார்.[2] 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் இந்திய அரசின் உயர் குடிமகன் விருதான பத்ம பூசன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். குப்தா 2010 ஆம் ஆண்டு மே மாதம் தனது 70 வயதில் இறந்தார்.[3] A few months later, he died on 26 May 2010, at the age of 70.[2]
குப்தாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாறுகள்
தொகு- L. C. Gupta, Abhitabh Gupta (1998). Radiological and Imaging Secrets. JPB. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8171796113.
- A. K. Saxena, L. C. Gupta (2002). Miraculous Effects of Acupressure. Srishti Publishers. p. 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8187075684.
- L. C. Gupta (2003). Sex and Sensuality. Srishti Publishers. p. 307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8187075998.
- L. C. Gupta (2004). What To Eat and What Not To Eat. Srishti Publishers. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8188575251.
- L. C. Gupta, P. G. Raman (2005). Manual of Medical Emergencies. Jaypee Medical Publishers. p. 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8171798032.
- L. C. Gupta (2006). How to live with Male and Female Meanpose. Srishti Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8188575527.
- L. C. Gupta (2007). Manual of First Aid: Management of General Injuries, Sports Injuries and Common Ailments. Jaypee Brothers Medical Publisher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8171793846.
- L. C. Gupta (2007). How to Live with Hypertension and Heart Attack. Srishti Publishers. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8188575510.
- L. C. Gupta, U. C. Sahu (2007). Diagnostic Ultrasound. Srishti Publishers. p. 498. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8184480641.
- L. C. Gupta (2009). Pocket Nurse's Dictionary. Srishti Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8174734525.
- L. C. Gupta (2010). Radiology And Imaging For Students & Practitioners. Aitbs Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8174730923.
- L. C. Gupta. Joy of Pregnency. Srishti Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8188575169.
மேற்கோள்கள்
தொகு- ↑ "6 Padma awards for Delhi doctors". Hindustan Times. 26 January 2010. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Dr. Laxmi Chand Gupta (Joined GRMC-1957)". GRMC Alumni Association. 2016. Archived from the original on 16 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help); Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help) - ↑ "IASM Members". Indian Association of Sports Medicine. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ 5.0 5.1 "Top Books by Dr. L. C. Gupta". Books Punch. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ L. C. Gupta (2007). Manual of First Aid: Management of General Injuries, Sports Injuries and Common Aliments. Jaypee Brothers Medical Publisher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8171793846.
- ↑ A. K. Saxena, L. C. Gupta (2002). Miraculous Effects of Acupressure. Srishti Publishers. p. 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8187075684.
- ↑ L. C. Gupta, P. G. Raman (2005). Manual of Medical Emergencies. Jaypee Medical Publishers. p. 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8171798032.
- ↑ L. C. Gupta (2007). How to Live with Hypertension and Heart Attack. Srishti Publishers. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8188575510.