இலட்சுமி நாராயண் கோயில், அகர்தலா
இலட்சுமி நாராயண் கோயில் (Lakshmi Narayan Temple, Agartala) இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள அகர்தலா நகரில் உள்ள இந்து கோயிலைக் குறிக்கிறது. [1] உச்சயந்தா அரண்மனை மைதானத்தில் அமைந்துள்ள இக்கோயில், இந்து தெய்வீக தம்பதியரான இலட்சுமி நாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோயிலாகும். 1909 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மன்னராக இருந்த திரிபுரா மன்னர் பிரேந்திர கிசோர் மாணிக்யாவால் அவரது ஆட்சியின் போது இக்கோயில் நிறுவப்பட்டது. ஓவ்வோர் ஆண்டும் இக்கோயிலில் அம்பு பாச்சி என்ற திருவிழா நடைபெறுகிறது.[2]
இலட்சுமி நாராயண் கோயில் Lakshmi Narayan Temple | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | திரிபுரா |
மாவட்டம்: | மேற்கு திரிப்புரா மாவட்டம் |
அமைவு: | அகர்தலா |
ஆள்கூறுகள்: | 23°50′03″N 91°16′58″E / 23.8342332°N 91.2829037°E |
கோயில் தகவல்கள் |
வரலாறு.
தொகுஒரு நூற்றாண்டுக்கு முன்பு திரிபுராவின் மன்னர் பிரேந்திர கிசோர் மாணிக்யா என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NIDHI+". nidhi.tourism.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
- ↑ "Ambubachi celebrations at Lakshmi Narayan Temple draw huge crowds - Tripura Chronicle" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-22. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.