இலட்சுமி மஜூம்தார்

இலட்சுமி மஜூம்தார் (Lakshmi Mazumdar) என்பவர் தில்லியைச் சேர்ந்த சாரணியர் ஆவார். இவர் நவம்பர் 1964 முதல் ஏப்ரல் 1983 வரை இந்தியச் சாரணர் சங்கத்தின் வழிகாட்டிகளின் தேசிய ஆணையராக இருந்தார். மேலும் சங்க உலக பெண் வழிகாட்டி/பெண் சாரணர் மையத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டவர் ஆவார். இது 16 அக்டோபர் 1966 அன்று உலகத் தலைவர் வழிகாட்டி, திருமதி ஓலவ் பேடன்-பவல் திறக்கப்பட்டது. .

இலட்சுமி மஜூமதார்
இந்திய சாரணர் சங்கம்-ஆணையர்
பதவியில்
1964–1983
முன்னையவர்கிருயானத் குன்சூரு
பின்னவர்இலட்சுமன் சிங்

மஜும்தார் 1922-இல் மிக இளம் வயதிலேயே சாரணிய அமைப்பில் சேர்ந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவர் அதிக பொறுப்புகளை வகித்தார். 1969-ஆம் ஆண்டு மஜும்தாருக்கு வெண்கல ஓநாய் விருது வழங்கப்பட்டது. இது உலக சாரணர் இயக்கத்தின் உலக அமைப்பின் தனிச்சிறப்பு ஆகும். இது உலக சாரணர் குழுவினால் உலக சாரணர்களுக்கான சிறப்பான சேவைகளுக்காக வழங்கப்படும் விருதாகும்.[1]

மஜும்தருக்கு இந்திய அரசு 1965-இல் பத்மசிறீ விருதினை வழங்கிச் சிறப்பித்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of recipients of the Bronze Wolf Award". scout.org. WOSM. பார்க்கப்பட்ட நாள் 2019-05-01.
  2. "Padma Shri Awardees". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.

வெளி இணைப்பு தொகு

முன்னர்
கிருயானத் குன்சூரு
இந்திய சாரணர் சங்கம்
1964–1983
பின்னர்
இலட்சுமன் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_மஜூம்தார்&oldid=3904854" இலிருந்து மீள்விக்கப்பட்டது