இலதா சாளுக்கியர்கள்

குசராத்தின் இலதா பிராந்தியத்தை ஆண்ட இரு இந்திய வம்சம்

இலதா சாளுக்கியர்கள் ( Chalukyas of Lata ) என்பது ஒரு இந்திய வம்சமாகும்.[1] இது 10-11 ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய குசராத்தின் இலதா பகுதியை ஆண்டது. இவர்கள் ஆரம்ப ஆண்டுகளில் மேலைச் சாளுக்கியர்களின் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். இறுதியில் குசராத்தின் சோலாங்கியர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

இலதா சாளுக்கியர்கள்
மேலைச் சாளுக்கியர்களின் நிலப்பிரபுக்கள்
சுமார் 970 பொ.ச.–சுமார் 1070 பொ.ச.
Map
இலதா சாளுக்கியர்களின் கல்வெட்டுகள் காணப்பட்ட இடங்கள்
வரலாறு 
• தொடக்கம்
சுமார் 970 பொ.ச.
• முடிவு
சுமார் 1070 பொ.ச.
முந்தையது
பின்னையது
மேலைச் சாளுக்கியர்கள்
சாளுக்கிய வம்சம்
தற்போதைய பகுதிகள்இந்தியா

வரலாறு தொகு

வம்சத்தின் முதல் ஆட்சியாளரான பாரப்பன், மேலைச் சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலப்பனின் தளபதியாக அடையாளம் காணப்படுகிறார். அவர் தைலப்பனால் இலதா பிராந்தியத்தின் ஆளுநராக ஆக்கப்பட்டிருக்கலாம். மெருதுங்காவின் 'பிரபந்த-சிந்தாமணியின்'படி, பாரப்பனும் சபடலக்சத்தின் ஆட்சியாளரும் ( சாகமான மன்னர் இரண்டாம் விக்ரஹராஜா ) கூட்டாகச் சேர்ந்து ஒரு முறை குசராத்தைத் தாக்கினர். குசராத்தின் சோலங்கி மன்னன் மூலராஜா, சபடலக்ச ஆட்சியாளரிடம் பாரப்பனைக் கையாளும் வரை அவரைத் தாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் பாரப்பனை தோற்கடித்தார். இது சபடலக்ச மன்னரை குசராத்தில் இருந்து தப்பி ஓட தூண்டியது. மெருதுங்கா குசராத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கணக்கு பாரபட்சமாக இருக்கலாம். விக்ரஹராஜா மூலராஜாவைத் தோற்கடித்து, பரூச் வரை அணிவகுத்துச் சென்றார். அங்கு அவர் தனது குல தெய்வமான ஆஷாபுர மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலைக் கட்டினார் என்று சாகமான வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஒரு கோட்பாட்டின் படி, இரண்டாம் விக்ரஹராஜா பாரப்பனுடன் கூட்டணி வைத்து, சுதந்திரம் அடைய அவருக்கு உதவினார்.[2]

ஹேமச்சந்திரனின் 'திவ்யாஷ்ரயா காவ்யத்தின்'படி, மூலராஜாவின் மகன் சாமுண்டராஜா இலதா மீது படையெடுத்து பாரப்பனைக் கொன்றார்.[3] பாரப்பனின் மகன் கோகி-ராஜா இலதா பிராந்தியத்தில் குடும்ப ஆட்சியை மீட்டெடுத்திருக்கலாம். ஆனால், பொ.ச.1074 சோலங்கியர்களால் வம்சம் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. [3]

கல்வெட்டுகள் தொகு

940 சாலிவாகன ஆண்டு (1018 பொ.ச.) தேதியிட்ட கீர்த்திராஜாவின் செப்புத்தகடு கல்வெட்டு சூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரது முன்னோர்களுக்கு கோகி, பாரப்பன் மற்றும் நிம்பர்கன் என்று பெயரிடுகிறது.[3]

972 சா. ஆ (1050 பொ.ச. எக்லகரே மற்றும் 1051 பொ.ச சூரத்து) தேதியிட்ட திரிலோச்சனா-பாலனின் இரண்டு செப்புத் தகடு கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் சாளுக்கியர்களின் புராண தோற்றம் பற்றிய கணக்கை வழங்குகின்றன: குடும்பத்தின் முன்னோடி படைப்பாளி தெய்வமான விரிஞ்சியின் சுலுகாவிலிருந்து (தண்ணீர் வைத்திருக்கும் ஒரு பாத்திரம் அல்லது மடிந்த பனை) உருவானது. தெய்வத்தின் ஆலோசனையின் பேரில், அவர் கன்னோசியின் இராஷ்டிரகூட இளவரசியை மணந்தார். திரிலோச்சனபாலனின் கல்வெட்டுகள் அவரது மூதாதையர்களான வத்சா, கீர்த்தி, கோகி மற்றும் பாரப்பாவைக் குறிப்பிடுகின்றன. வத்சா சோமநாதக் கடவுளுக்கு தங்கக் குடை கட்டியதாகவும், இலவச உணவுகாக சத்திரத்தை நிறுவியதாகவும் கூறுகிறது. இந்தக் கல்வெட்டுகளில் 'திரிலோச்சனபாலன் மகா-மண்டலேசுவரன்' என்று அழைக்கப்படுகிறார். 1050 பொ.ச. கல்வெட்டு அவர் ஏகல்லகரம் கிராமத்தை (நவீன எக்லகரே ) தாராதித்யன் என்ற பிராமணருக்கு நன்கொடையாக அளித்ததை பதிவு செய்கிறது.[3]

சான்றுகள் தொகு

  1. Syed Amanur Rahman and Balraj Verma (2006). The Beautiful India - Daman & Diu. Reference Press. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184050226. https://books.google.com/books?id=53owAQAAIAAJ. 
  2. Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பக். 30–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780842606189. https://books.google.com/books?id=n4gcAAAAMAAJ. 
  3. 3.0 3.1 3.2 3.3 D. C. Sircar, தொகுப்பாசிரியர் (1970). "Ekallahara Grant of Trilochanapala". Epigraphia Indica. 36. Archaeological Survey of India. பக். 12–15. https://archive.org/stream/epigraphia-indica/epigraphia-indica-vol-36#page/n37/mode/1up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதா_சாளுக்கியர்கள்&oldid=3399848" இலிருந்து மீள்விக்கப்பட்டது