இலந்தனம்-நிக்கல் கலப்புலோகம்
இலந்தனம்-நிக்கல் கலப்புலோகம் (Lanthanum-nickel alloy) என்பது இலந்தனம் தனிமம் நிக்கலுடன் சேர்ந்து உருவாகும் கலப்புலோகங்களைக் குறிக்கும். LaNi5, La2Ni7, LaNi2, LaNi3, La2Ni3, LaNi, La3Ni போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
12142-63-1 | |
பண்புகள் | |
LaNi | |
வாய்ப்பாட்டு எடை | 197.60 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இலந்தனம் பெண்டாநிக்கல்
பெண்டாநிக்கல் இலந்தனம் | |
இனங்காட்டிகள் | |
12196-72-4 | |
பண்புகள் | |
LaNi5 | |
வாய்ப்பாட்டு எடை | 432.37 |
தோற்றம் | தங்கம் திண்மம்[1] |
அடர்த்தி | 7.950 g/cm3[2] |
reacts with water[2] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
LaNi5
தொகுLaNi5 என்பது CaCu5 கட்டமைப்பைக் கொண்ட ஓர் இடை உலோக சேர்மமாகும். இது அறுகோண படிக அமைப்பைச் சேர்ந்தது. இது 200 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் காற்றில் ஆக்சிசனேற்றம் செய்யப்படும். மேலும் 20 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் ஐதரோகுளோரிக் அமிலம், சல்பூரிக் அமிலம் அல்லது நைட்ரிக் அமிலம் ஆகியவற்றுடன் வினைபுரியும். ஐதரசனேற்ற வினைகளுக்கு இலந்தனம்-நிக்கல் கலப்புலோகம் ஒரு வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதர கலப்புலோகங்கள்
தொகுLaNi5 உடன், La2Ni7, LaNi2, LaNi3, La2Ni3, LaNi, மற்றும் மற்ற உலோகக் கலவைகளும், LaNi2.286</su (நாற்கோணம், இடக்குழு I4̄2m) போன்ற விகிதவியல் ஒவ்வா சேர்மங்களும் அறியப்படுகின்றன.[3] LaxNiy கலப்புலோகத்தில் உள்ள நிக்கல் அணுக்கள் LaNi2.5Co2.5 போன்ற பிற அணுக்களால் மாற்றப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 13399 MSDS. Alfa Aesar. [2017-11-18]
- ↑ 2.0 2.1 Sigma-Aldrich Co., Lanthanum-nickel alloy. Retrieved on 2017-11-18.
- ↑ A.V. Klimyenko, J. Seuntjens, L.L. Miller, B.J. Beaudry, R.A. Jacobson, K.A. Gschneidner (November 1988). "Structure of LaNi2.286 and the La-Ni system from LaNi1.75 to LaNi2.50". Journal of the Less Common Metals 144 (1): 133–141. doi:10.1016/0022-5088(88)90357-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508888903578. பார்த்த நாள்: 2018-11-27.
- ↑ Sakai T, Miyamura H, Kuriyama N, et al. The influence of small amounts of added elements on various anode performance characteristics for LaNi2. 5Co2. 5-based alloys[J]. Journal of the Less common Metals, 1990, 159: 127-139.