இலந்தனம் குப்ரேட்டு

வேதிச் சேர்மம்

இலந்தனம் குப்ரேட்டு (Lanthanum cuprate) என்பது CuLa2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரேட்டு (CuOn]2n-) எதிர்மின் அயனியும் இலந்தனம் (La3+) நேர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது என்பதை இந்தப் பெயர் குறிக்கிறது. உண்மையில் இதுவொரு சகப்பிணைப்பு சேர்மமாகும். இலந்தனம் ஆக்சைடும் தாமிர(II) ஆக்சைடும் சேர்ந்து உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து ஆக்சிசனைக் கொண்டு ஆற்றிப் பதமாக்கல் மூலம் இலந்தனம் குப்ரேட்டு யாரிக்கப்படுகிறது.

இலந்தனம் குப்ரேட்டு
இனங்காட்டிகள்
12053-92-8
InChI
  • InChI=1S/Cu.2La.4O/q+2;2*+3;4*-2
    Key: VTQXYJGFVOFCDC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159645064
SMILES
  • [O-2].[O-2].[O-2].[O-2].[Cu+2].[La+3].[La+3]
பண்புகள்
CuLa2O4
வாய்ப்பாட்டு எடை 405.35 g·mol−1
தோற்றம் திண்மம்
அடர்த்தி 7.05 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் டெட்ராபுளோரோநிக்கலேட்டுடன் (K2NiF4) தொடர்புடைய நாற்கோணகக் கட்டமைப்பை இலந்தனம் குப்ரேட்டு ஏற்றுக்கொண்டு செஞ்சாய்சதுர வடிவத்தில் காணப்படுகிறது.[1][2] சில இலந்தனங்களை பேரியம் மூலம் இடம் மாற்றுவதால் இலந்தனம் பேரியம் தாமிர ஆக்சைடு எனப்படும் நான்கிணைய நிலை CuLa1.85Ba0.15O4 சேர்மத்தை அளிக்கிறது. கலப்பு செய்யப்பட்ட இலந்தனம் குப்ரேட்டு −243 °செல்சியசு வெப்பநிலையில் மீகடத்துத் திறனைக் காட்டுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் இது அதிக வெப்பநிலையாக இருந்தது. இந்த கண்டுபிடிப்பு குப்ரேட்டு மீகடத்திகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியது. சியார்ச்சு பெட்நார்சு மற்றும் கே. அலெக்சு முல்லர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Longo, J.M.; Raccah, P.M. (1973). "The structure of La2CuO4 and LaSrVO4". Journal of Solid State Chemistry 6 (4): 526–531. doi:10.1016/S0022-4596(73)80010-6. Bibcode: 1973JSSCh...6..526L. 
  2. Grande, B.; Müller-Buschbaum, Hk.; Schweizer, M. (1977). "Über Oxocuprate. XV zur Kristallstruktur von Seltenerdmetalloxocupraten: La2CuO4, Gd2CuO4". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 428: 120–124. doi:10.1002/zaac.19774280116. 
  3. Bednorz, J. G.; Müller, K. A. (1986). "Possible High Tc Superconductivity in the Ba-La-Cu-O System". Zeitschrift für Physik B: Condensed Matter 64 (2): 189–193. doi:10.1007/BF01303701. Bibcode: 1986ZPhyB..64..189B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்_குப்ரேட்டு&oldid=3912296" இலிருந்து மீள்விக்கப்பட்டது