இலலித் மோகன் பானர்ஜி
இலலித் மோகன் பானர்ஜி (Lalit Mohan Banerjee) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவ கல்வியாளரும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறுவை சிகிச்சை பட்டம் பெற்ற முதல் மருத்துவ நிபுணருமாவார்.[1] இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பேராசிரியராக இருந்தார். மேலும், இந்தியக் குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தர்.[2] இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் அதன் மூன்றாவது தலைவராக இருந்தார் (1941-1942).[3] இந்த காலகட்டத்தில்தான், புகழ்பெற்ற கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான இரவீந்திரநாத் தாகூருடன் இணைந்து செயல்பட இவருக்கு கிடைத்தது. மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக 1955இல் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த குடிமை விருதான பத்மா பூஷனின் விருதைதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[4] கொல்கத்தாவின் சோத்பூரிலுள்ள ஒரு சாலைக்கு "டாக்டர் எல்.எம். பானர்ஜி சாலை " என்று பெயரிடப்பட்டுள்ளது. [5]
இலலித் மோகன் பானர்ஜி | |
---|---|
பிறப்பு | மேற்கு வங்காளம், இந்தியா |
பணி | அறுவை சிகிச்சை நிபுணர் |
அறியப்படுவது | மருத்துவ கல்வியாளர் |
விருதுகள் | பத்ம பூசண் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Asoke Kumar Bagchi" (PDF). National Medical Journal of India. 2005. Archived from the original (PDF) on மே 25, 2021. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
- ↑ Dilip Kumar Chakrabarti; Ramanuj Mukherjee; Samik Kumar Bandyopadhyay; Sasanka Nath; Saibal Kumar Mukherjee (October 2011). "R.G.Kar Medical College, Kolkata—A Premiere Institute of India". Indian J Surg. 73 (5): 390–393. doi:10.1007/s12262-011-0327-1. பப்மெட்:23024555.
- ↑ "Past Presidents". Association of Surgeons of India. 2016. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help); Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help) - ↑ "Dr. L.M. Banerjee Road". Pinda.in. 2016. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.