இலாட் பஜார்

இலாட் பஜார் (Laad Bazaar) அல்லது சூடி பஜார் என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள வளையல்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு பழமையான சந்தையாகும். வரலாற்று சிறப்புமிக்க சார்மினாரிலிருந்து செல்லும் நான்கு முக்கிய சாலைகளில் இது அமைந்துள்ளது.

இலாட் பஜார்

இலாட் என்றால் வளையல்களை உருவாக்க பயன்படும் அரக்கு எனப் பொருள். அதில் செயற்கை வைரங்கள் பதிக்கப்படுகின்றன. இந்த 1 கிலோமீட்டர் (0.62 மைல்) நீளமான வணிக வளாகங்களில், பெரும்பாலான கடைகள் வளையல்கள், புடவைகள், திருமணம் தொடர்பான பொருட்கள் மற்றும் சாயல் நகைகளை விற்கின்றன.

இது பழைய நகரத்தின் திருமண ஆடைகள் வாங்குவதற்கான சந்தையாகும். சோனா பாய் எனப்படும் ஐதராபாத்து கண்ணாடி வளையல்கள் இங்கே கிடைக்கின்றன. பழைய நகரத்தின் இந்த வண்ணமயமான வியாபாரச் சந்தை சார்மினாரிலிருந்து வெளியேறும் தெருக்களில் ஒன்றில் செல்கிறது. வளையல்கள், திருமண ஆடைகள், முத்துக்கள், அத்தர் (வாசனை திரவியம்) மற்றும் பாரம்பரிய ஐதராபாத் கண்ணாடி மற்றும் கல் பதிக்கப்பட்ட வளையல்கள் அனைத்தும் இங்கு விற்கப்படுகின்றன. [1][2][3]

வரலாறுதொகு

குதுப் சாகிகள் மற்றும் ஐதராபாத் நிசாம்களின் காலத்திலிருந்தே இந்த சந்தை இருந்து வந்துள்ளது. இது சார்மினார், மக்கா பள்ளி வாசல், சௌமகல்லா அரண்மனை போன்ற அடையாளங்களுக்கு அருகில் உள்ளது.

கடையில் பொருட்கள் வாங்குதல்தொகு

 
இலாட் பஜாரில் ஒரு பொதுவான கடை

சௌடி பஜார் வளையல்களுக்கான முக்கிய சந்தையாகும். இது வளையல்கள், இரத்தினக்கற்கள், முத்துக்கள், நகைகள், வெள்ளிப் பொருட்கள், நிர்மல் ஓவியங்கள், கலம்காரி ஓவியங்கள், பீதர் கலன், கற்களால் பதிக்கப்பட்ட அரக்கு வளையல்கள் புடவைகள், கையால் செய்யப்பட்ட பட்டு, பருத்தி பொருட்கள், [4] புரோக்கேட், வெல்வெட் மற்றும் தங்க சித்திரத்தையல் துணிகள், பாரம்பரிய காரா துப்பட்டாக்கள், அரக்கு வளையல்கள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவற்றிற்கு பிரபலமானது.

குறுகிய பாதையில் புர்கா உடையணிந்த பெண்கள், வளையல் கடைகள் மற்றும் மரத்தாலான பால்கனிகளுடன் பழைய கட்டிடங்கள், பேரம் பேசுதல் மற்றும் தடுமாற்றம் ஆகியவை இந்த சந்தையின் ஒரு பகுதியாகும். கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை "வற்புறுத்தி அழைக்கும்" தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஊழியரை கடையின் நுழைவாயிலில் நிறுத்தி, அவ்வழியே செல்பவர்களை வலுக்கட்டாயமாக தங்கள் கடைக்குள் நுழையுமாறு அழைக்கிறார்கள். [5]

 
இலாட் பஜார் அருகே ஆட்டோ ரிக்சாக்கள்

குறுகிய வீதியில் கூட்டமாக இருப்பதால் ஆட்டோ ரிக்‌சாக்களும், கார்களும் சார்மினார் முனையிலிருந்து (விருப்பமான நுழைவாயில்) நுழைவதைத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் பாதசாரிகள், மிதி வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் மற்றும் சில நேரங்களில் சைக்கிள்-ரிக்‌சாக்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகின்றன.

இலாட் பஜாரின் தென்கிழக்கில் சௌமகல்லா அரண்மனை உட்பட பல்வேறு நிசாம்களால் கட்டப்பட்ட அரண்மனைகள் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. "Hyderabad on the Net: Other Attractions". Hyderabad.co.uk. 7 January 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Lad Bazar..the bangle market near Charminar". Hyderabadspider.com. 15 December 2009. 25 January 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. asiarooms.com. "Lad Bazar Hyderabad Shopping in Hyderabad India Shopping Malls in Hyderabad". Asiarooms.com. 15 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 June 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. "Street Smart Shopping". Channel6. 9 October 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Bazaars - Shopping Areas". 7 August 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-29 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

  வெளிப் படிமங்கள்
  Bangles of Laad Bazaarimages. Published on பிளிக்கர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாட்_பஜார்&oldid=3544549" இருந்து மீள்விக்கப்பட்டது