இலா மித்ரா

வங்கதேச செயற்பாட்டாளர்

இலா மித்ரா (Ila Mitra,  18 அக்டோபர் 1925 - 13 அக்டோபர் 2002) என்பவர் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பொதுவுடைமை செயற்பாட்டாளர் மற்றும் விவசாயிகள் இயக்க அமைப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக கிழக்கு வங்காளத்தில் (இப்போது வங்கதேசம்) செயல்பட்டார்.

இலா மித்ரா
1955 இல் மித்ரா
மாணிக்தலா தொகுதிக்கான
மேற்கு வங்க சட்டமன்ற
உறுப்பினர்
பதவியில்
1962 – 1971, 1972-1977
முன்னையவர்ரானேந்திர நாத் சென், அனிலா தேபி
பின்னவர்அனிலா தேபி, சுஹ்ரித் மல்லிக் சவுத்ரி
தொகுதிமாணிக்தலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இலா சென்

(1925-10-18)18 அக்டோபர் 1925
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு13 அக்டோபர் 2002(2002-10-13) (அகவை 76)
இந்தியா, கொல்கத்தா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்இராமதாஸ் மித்ரா

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு
 
இளம் மித்ரா தடகளத்தில் தனது விருதுகளுடன்

மித்ராவின் மூதாதையர்கள் இன்றைய வங்கதேசத்தின், ஜெனிதக் மாவட்டத்தில் உள்ள பாகுடியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். [1] இவர் 1925 அக்டோபர் 18 அன்று கொல்கத்தாவில் பிறந்தார்.[2] இவரின் தந்தை நாகேந்திர நாத் சென் தலைமைத் துணை கணக்காளராக அரசு பணியில் பணியில் இருந்தார். இலா இளம் வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். வங்கத்தைச் சேர்ந்த ஜாதிய ஜுபா சங்கா என்ற விளையாட்டு சங்கத்தின் சார்பில் 1937, 1938 எனத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பெண்களுக்கான இளையோர் வாகையர் பட்டத்தை வென்றார். பின்லாந்தின் தலைநகரான ஹெலின்ஸ்கி நகரில் 1940ஆம் ஆண்டு 12வது ஒலிம்பிக் பந்தயத்ததுக்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இந்நிலையில் பிரித்தானிய இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் கலந்துகொள்ள அவரது 15 வயது மகள் இலா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தகவல் நாகேந்திர நாத் சென்னுக்கு அதிகார வர்கத்திடமிருந்து செய்திகாக கிடைத்தது என்றாலும், அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்படவில்லை. என்றாலும் பின்னர் இரண்டாம் உலகப் போரின் காரணத்தால் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன. இலா 1942 இல் கல்கத்தாவின் பெதுன் பள்ளியில் இடைநிலை வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். பின்னர் பெதுன் கல்லூரியில் வங்காள மொழியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். [2] கல்லூரியில் இவருக்கு மார்க்சியம் அறிமுகமானது. மெல்லமெல்ல இவர் கட்சியின் ஊழியராக மாறினார்.[3]

திருமணம்

தொகு

1944இல் இலா சமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த ராமேந்திரநாத் மித்ரா என்றவரை மணந்தார். மித்ராவும் இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர். நாட்டுப் பிரிவினையின்போது இலாவின் மாமியார் தங்கள் குடும்ப சொத்துகளை பராமரிப்பதற்காக, கிழக்கு வங்கத்திலேயே (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் பகுதி) தங்க முடிவுசெய்தார்.[3]

விவசாயிகள் எழுச்சியில் முன்னணி பங்கு

தொகு

தற்போதய வங்கதேசத்தின் சப்பை நவாப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராஜசாகி பிராந்தியத்தில் விவசாயிகள் மற்றும் பழங்குடி சந்தாலிகளின் தலைவராக மித்ரா இருந்தார். மேலும் அவர் பெரும்பாலும் ராணிமா (ராணி தாய்) என்று குறிப்பிடப்பட்டார். சந்தாலி பழங்குடிள் அதுவரை அறுவடையில் பாதியை நில உரிமையாளர்களுக்கு கொடுக்கவேண்டி இருந்தது. ஆனால் மூன்றில் ஒரு பங்கை மட்டும் நில உரிமையாளர்கள் பெற வேண்டும் என்று இலாவும் அவரது கணவர் ராமேந்திர நாத் உள்ளிட்ட சகாக்களும் போராடிவந்தனர். இலாவும் ராமேந்திர நாத்தும் அந்த விவசாயிகளுடனே வாழத் தொடங்கினர் 1950 சனவரி 5ஆம் நாள் சப்போ நவாப்கஞ்சில் உள்ள நாச்சோல் உபாசிலாவில் விவசாயி-சாந்தலி எழுச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த எழுச்சியை காவல் துறையினரும், அன்சார் பாஹினியும் முறியடித்தனர். அப்போது நடந்த நிகழ்வில் நான்கு காவல் துறையினர் இறக்க நேரிட்டது. இந்நிகழ்வின் பழிவங்ஙலில் இருந்து மித்ராவும், அவரது சகாக்களும் தப்பிக்க முயன்றபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் நான்கு நாட்கள் நாச்சோல் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டார். காவலில் இருந்தபோது, இவர் திரும்பத் திரும்ப கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். [4] இவரது இரண்டு கால்களும் நொறுக்கப்பட்டன. பின்னர் இவர் 1950 சனவரி 21 அன்று ராஜசாகில் உள்ள நடுவன் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் கிளர்ச்சியில் ஈடுபடுவதை ஏற்காததால் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தேசத்துரோக வழக்கு விசாரணைக்குப் பிறகு, மித்ராவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[3]

பிற்கால வாழ்வு

தொகு

சித்திரவதைகளின் காரணமாக, மித்ரா சிறையில் நோய்வாய்ப்பட்டார். 1954 இல், பாகித்தானின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் இவரை பிணையில் விடுதலை செய்து, கொல்கத்தாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பியது. இவர் சிறையில் அடைந்த சித்ரவதையின் காரணமாக, எப்போதும் கெந்திக் கெந்தி நடக்க வேண்டி இருந்தது. இவர் இந்துவாகவும், பொதுவுடமை செயற்பாட்டளாரகவும் இருந்ததால், துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காக, மீண்டும் இவர் கிழக்கு பாகித்தானுக்குத் திரும்பவில்லை, வாழ்நாள் முழுவதும் இந்தியாவிலேயே இருந்தார். 1971 வங்கதேச விடுதலைப் போரின்போது பொதுக் கருத்தும், ஆதரவைத் திரட்டும் பணிகளிலும் இவர் கலந்துகொண்டார். 1996 வரை வங்கதேசத்துக்குச் செல்லாமல் இருந்த இலா, புதிய தேசத்தின் 25ஆம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு அரசு விருந்தினராக வந்து கலந்துகொண்டார்.[3]

தன் முயற்சியால் இவர் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து, சிவநாத் சாஸ்திரி கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு விரிவுரையாளராக பணிபுரிந்தார்.[3] இவர் 1962-1971 மற்றும் 1972-1977 ஆகிய ஆண்டுகளில் மணிக்தலா தொகுதியில் இருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965 இல் மேற்கு வங்கத்தில் முசுலிம்களுக்கு எதிரான கலவரத்தை நிறுத்துவதில் அவர் பங்கு வகித்தார். [5]

 
வங்தேசத்ன் தினஜ்பூரில் உள்ள தேபாகா சாட்டாரில் இல மித்ரா சுவரோவியம்.

மித்ரா 2002 அக்டோபர் 13 அன்று கொல்கத்தாவில் இறந்தார். [6]

விருதுகள்

தொகு
  • இலக்கிய மொழிபெயர்ப்பு வேலைக்காக சோவியத் லேன்ட் நெஹெரு
  • இந்திய அரசின் தாமிர பத்திரம்.

குறிப்புகள்

தொகு

 

  1. "Ancestral home of Ila Mitra lies uncared for". Dhaka Tribune. 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  2. 2.0 2.1 Mesba Kamal (2012). "Mitra, Ila". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 சோஹினி சட்டோபாத்யாய, கட்டுரை, இலா: ஒலிம்பிக்கை இழந்த புரட்சிப் பெண், இந்து தமிழ், 4 ஆகத்து 2021
  4. Panjabi, Kavita (14 August 2010). "Otiter Jed or Times of Revolution: Ila Mitra, the Santals and Tebhaga Movement". Economic & Political Weekly (Mumbai: Sameeksha Trust) XLV (33). பன்னாட்டுத் தர தொடர் எண்:2349-8846. http://www.epw.in/journal/2010/33/special-articles/otiter-jed-or-times-revolution-ila-mitra-santals-and-tebhaga. பார்த்த நாள்: 15 May 2016. 
  5. Mitra, Dipawali (March 2, 2020). "Peace message: Citizens recount shared riot history on Facebook". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  6. "Ila Mitra - Revolutionary, Trailblazer" (in en). The Daily Star. 2015-10-17. http://www.thedailystar.net/in-focus/ila-mitra-revolutionary-trailblazer-158164. "Ila Mitra - Revolutionary, Trailblazer". The Daily Star. 17 October 2015. Retrieved 12 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலா_மித்ரா&oldid=3210958" இலிருந்து மீள்விக்கப்பட்டது