இலித்தியம் லாக்டேட்டு
இலித்தியம் லாக்டேட்டு (Lithium lactate) என்பது CH3CH(OH)COOLi[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இலித்தியமும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. படிக உருவமற்று உருவாகும் இவ்வுப்பு நீரில் நன்றாக கரையும்.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இலித்தியம் 2-ஐதராக்சிபுரோப்பனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
867-55-0 | |
EC number | 212-761-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24867598 |
| |
பண்புகள் | |
C 3H 5LiO 3[1][2] | |
வாய்ப்பாட்டு எடை | 96.01 |
தோற்றம் | படிக உருவமற்றது |
அடர்த்தி | கி/செ.மீ3 |
உருகுநிலை | 300 °C (572 °F; 573 K) |
நன்றாக கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுலாக்டிக் அமிலத்தையும் இலித்தியம் ஐதராக்சைடையும் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் இலித்தியம் லாக்டேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுபடிக உருவமற்ற திண்ம உருவில் இலித்தியம் லாக்டேட்டு காணப்படுகிறது. தண்ணீரிலும் கரிமக் கரைப்பான்களிலும் நன்றாக கரையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.[5] and organic solvents.
ஒளியியல் மாற்றியப் பண்பை விளக்குகிறது.
சூடுபடுத்தினால் சிதைவடைந்து காரப்பண்பு கொண்ட புகையை வெளியிடுகிறது.[6]
பயன்
தொகுஉடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற ஊக்குவிக்கும் மருந்துகளின் ஒரு பகுதியாக இலித்தியம் லாக்டேட்டு பயன்படுகிறது. உளவியல் நோய்களுக்கெதிரான மருந்துகளிலும் இது பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "867-55-0 CAS | LITHIUM LACTATE | Laboratory Chemicals | Article No. 04444". Loba Chemie. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "27848-80-2 - L-(+)-Lactic acid lithium salt, Thermo Scientific - Lithium Lactate - J18160 - Alfa Aesar". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Lithium Lactate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Lithium lactate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ Lewis, Robert A. (31 May 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 840. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-13515-0. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ Lewis, Richard J. (13 June 2008). Hazardous Chemicals Desk Reference (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 844. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-18024-2. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.