இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ்

இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ் (Botanical Journal of the Linnean Society) என்பது இலின்னேயசு சமூகம் ஒவ்வொரு மாதமும் தாவரத்திணைத் தொடர்புடைய, முதன்மையான மூல ஆய்வுதாள்களை வெளியிடும். இந்த ஆய்விதழ் முக்கியமான உயிரியல் வகைப்பாடு குறித்தவைகளையே வெளியிடும் நோக்கத்தையே கொண்டுள்ளது. தாவர இனம் குறித்தவைகள், பூஞ்சைகள் ஆகியவற்றின் உடற்கூற்றியல், உயிரியல் அமைப்புமுறை, உயிரணு உயிரியல், சூழலியல், மக்கள் தாவரத்தொடர்பியில், எதிர்மின்னி நுண்நோக்கி, உருவத்தோற்றவியல், தொல் தாவரவியல், மகரந்தத்தூளியல், தாவர வேதியியல் பிரிவுகள் குறித்த ஆய்வறிக்கைகளும் இவற்றில் அடங்கும்.[1] இதன் பதிப்புகள் அச்சு வடிவத்திலும், இணையப் பக்க வடிவிலும் வெளிவருகிறது.

இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ்  
சுருக்கமான பெயர்(கள்) Bot. J. Linn. Soc.
துறை தாவர அறிவியல்கள்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: Michael F. Fay(Michael Francis Fay)
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் Linnean Society (ஐக்கிய இராச்சியம்)
வெளியீட்டு இடைவெளி: மாத இதழ்
Open access To developing countries via AGORA; also upon payment of a fee by the author.
தாக்க காரணி 2.911 (2020)
குறியிடல்
ISSN 0024-4074
இணைப்புகள்

தாவரவியல் குறித்து சார்லசு டார்வின், ஆல்பிரடு அரசல் வாலேசு போன்றவர்களின் ஆய்வுகள், 1858 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்த இதழிலிருந்து (Biological Journal of the Linnean Society), இவ்விதழ் தோற்றம் பெற்றது குறிப்பிடதக்கதாகும்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு