இலுகன்கா (Lukanka (பல்கேரிய: луканка) என்பது பல்காரியா நாட்டு உணவு வகை ஆகும். இது சுயுக் (sujuk) உணவு போன்றதென்றாலும் அதனைவிட அதிக நறுமணம் கொண்டதாக உள்ளது. இது பாதி உலர்ந்த தன்மையுடனும், நீள் உருண்டை வடிவத்திலும், தட்டையாகவும் தோற்றமளிக்கும். வெளிப்புறம் அடர் பழுப்பு நிறமாகவும், உட்புறம் சிவப்பாகவும் இருக்கும். இதனுள் சிறுசிறு துண்டுகளாக இறைச்சியும், கொழுப்பும் உள்ளடங்கி இருக்கும்.

இலுகன்கா
பரிமாறப்படும் வெப்பநிலைகொத்திறைச்சி
தொடங்கிய இடம்பல்காரியா
முக்கிய சேர்பொருட்கள்பன்றி இறைச்சி, கன்றின் இறைச்சி

பாரம்பரியமான இவ்வுணவு, கொத்திறைச்சி போல நசுக்கப்பட்டு பன்றி இறைச்சி, கன்றுக்குட்டி இறைச்சி, மிளகு, சீரகம், உப்பு கலந்து தயாரிக்கப்படும். உறைபோல பசுவின் காய்ந்த சிறுகுடலுக்குள் அடைக்கப்பட்டு, பின்பு இது காற்றோட்டமான இடத்தில் 40 முதல் 50 நாட்கள் உலர விடப்படுகிறது. இதனால் நாளடைவில் இது தட்டையான உருவம் பெறுகிறது. வழக்கமாக இது துண்டுகளாக நறுக்கப்பட்டு உணவுக்கு முன் பசியூக்கியாக உண்ண தரும் பழக்கம் அந்நாட்டில் உள்ளது.

இதில் பலவகைகள் உண்டு. அதில் ஒருவகை (Karlovska lukanka), பாரம்பரிய உணவாகச் சட்டப் பாதுகாப்பினை ஐரோப்பிய நாடுகளுக்கும், ஐக்கிய ராச்சியத்திற்கும் ( an EU and UK-wide Traditional specialities guaranteed (TSG) ) பெற்றுள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Commission Implementing Regulaiton (EU) No 837/2014 of 31 July 2014 entering a name in the register of traditional specialities guaranteed ПАНАГЮРСКА ЛУКАНКА(PANAGYURSKA LUKANKA) (STG)". Official Journal of the European Union. 1 August 2014. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுகன்கா&oldid=3932560" இலிருந்து மீள்விக்கப்பட்டது