இலெமூர் கடற்கரை
இலெமூர் கடற்கரை (Lemur Beach) இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். இது நாகர்கோவில் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.[1][2] நீலக்கடலும் நீண்ட மணல் பரப்பைக் கொண்ட கடற்கரையும் இக்கடற்கரையின் சிறப்புகளாகும். கடற்கரை மணல் பரப்பு சுத்தமாக இருப்பது மேலும் கூடுதல் சிறப்பாகும். குட்டி மாலத்தீவு, ஆயிரம் கால் பொழிமுகம் என்ற பெயர்களாலும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடலில் கலக்கும் கடற்கரைகளில் லெமூர் கடற்கரையும் ஒன்றாகும்.
பெயர் காரணம்
தொகுகன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்திருந்ததாக கருதப்படும் இலெமூரியா கண்டத்தின் நினைவாக, இந்தக் கடற்கரைக்கு இலெமூர் கடற்கரை என்ற பெயர் ஏற்பட்டது.
போக்குவரத்து
தொகுநாகர்கோவிலில் இருந்து ராசாக்கமங்கலம் வழியாக குளச்சல் செல்லும் சாலையில் கணபதிபுரம் பகுதியில் இக்கடற்கரை அமைந்துள்ளது. நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல், மண்டைக்காடு வழித்தடங்களில் செல்கின்ற அரசுப் பேருந்துகளில் ஏறி கணபதிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து வாடகை வாகனங்களில் இலெமூர் கடற்கரைக்குச் செல்லலாம்.
சுற்றுலா
தொகுமாலையில் சூரியன் மறைவு பார்க்க நிறந்த இடமாக இது உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் மாலை 8 மணி வரையில் கடற்கரையை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் 24 மணி நேரமும் இங்கு செல்லலாம். அண்மையில் தங்கும் விடுதிகள் எதுவும் இல்லை. இங்கு குளிப்பதற்கும் மது அருந்தவும் அனுமதி இல்லை.[3]
இந்த அழகிய கடற்கரையில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதும், பருவ மழைக் காலத்தில் இராட்சத அலைகள் எழும். இந்த இராட்சத அலைகள் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதும் உண்டு. இதனால் இங்கு கடலில் குளிப்பது தடைசெய்யபட்டுள்ளது. 2024 ஆண்டின் கணக்கீட்டின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் கடலலைகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கன்னியாகுமரி: வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் அறிந்திராத பிரமிப்பூட்டும் சுற்றுலா தலங்கள்". BBC News தமிழ். 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "Google Travel". www.google.com.my. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "கன்னியாகுமரியில் ஒரு 'குட்டி மாலத்தீவு'.. கோடை விடுமுறையை கழிக்க அட்டகாசமான ஸ்பாட்!". News18 Tamil. 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ "குமரியில் அழகும், ஆபத்தும் நிறைந்த 'லெமூர்' கடற்கரை: 5 ஆண்டுகளில் 21 பேர் உயிரிழந்த பரிதாபம்". 2024-05-12.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)