இலைவடு ( leaf scar ) என்பது தாவர தண்டிலிருந்து இலை உதிர்ந்த பின் அவ்விடத்தில் ஏற்படும் அடையாளம் ஆகும். தண்டின் மீது இலைக்காம்பின் அமைவிடத்தை இது காட்டுகிறது. குறிப்பாக கிளையின் கணுக்குருத்துகளில் (axillary buds) இது காணப்படும்.

ஏலந்தஸ் மிஸ்டில் இலை வடு

தோற்றம் தொகு

இலையுதிர் தாவரங்களில் வளர்ச்சிக்கு உகந்த பருவகாலத்தின் இறுதியில் இலை வடுக்கள் தோன்றுகின்றன. இந்த காலத்தில் தன்டிற்கும் இலைக்காம்பிற்கும் இடையே பிரிக்கும் திசு (abscission layer) தோன்றுகிறது. இத்திசு தன்டிற்கும் இலைக்கும் இடையே உள்ள இணைப்பைத் துண்டித்து இலையை உதிரச்செய்கிறது. இலை உதிர்ந்தபின் அவ்விடத்தில் ஒரு வடுவை தோற்றுவிக்கிறது.[1]

கற்றைவடு தொகு

கற்றை வடுக்கள் வட்ட வடிவில் அமைந்திருக்கும். இவை இலை வடுவின் உட்பகுதியில் காணப்படும். தண்டையும் இலையையும் இணைக்கும் கடத்து திசுக்களின் அமைவிடத்தின் அடையாளமே கற்றை வடுக்கள் ஆகும்.[2] கற்றை வடுக்களின் எண்ணிக்கை தாவரங்களை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 
ஏஸ்குலஸ் ஹிப்போகாஸ்டானம் இலை வடு

மேற்கோள்கள் தொகு

  1. "Winter twigs". Oregon state university. Retrieved 8 November 2015.
  2. Dirr, Michael Illustrations by Bonnie Dirr (1990). Manual of woody landscape plants. (4. ed., rev. ed.). [S.l. ISBN 0-87563-344-7.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leaf scars
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைவடு&oldid=3910823" இலிருந்து மீள்விக்கப்பட்டது