இல்சு கோக்லர்-ரோலெப்சன்

இல்சு கோக்லர்-ரோல்ப்சன் (Ilse Kohler-Rollefson) ஒரு ஜெர்மனி விஞ்ஞானி ஆவார். கால்நடை மேய்ப்பு, பாரம்பரிய விலங்குகள் நல மருத்துவம், ஒட்டகங்களை பராமரிப்பதில் பிரபலமானவர். ஒட்டகங்களை நம்பியிருப்பதால் அவர்களின் வாழ்க்கை முறை அச்சுறுத்தலுக்கு உள்ளான ரெய்கா இன மக்களைக் கண்டுபிடித்தார். மேலும் அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். இவரது இந்தப்பணிக்காக 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான, நாரி சக்தி விருதும், 2018இல், ஜெர்மன் கூட்டாட்சி அரசாங்கத்தின் பெடரல் கிராஸ் ஆஃப் மெரிட் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இல்சு கோக்லர்-ரோல்ப்சன்
ஒட்டகத்துடன் இல்சு கோக்லர்-ரோல்ப்சன்
பிறப்புகோக்லர்
ஆம்பர்கு
தேசியம்ஜெர்மனி
பணிகால்நடை பராமரிப்பு
அறியப்படுவதுஒட்டக பரமரிப்பும் மேய்த்தலும்
வாழ்க்கைத்
துணை
கேரி ரோல்ப்சன்
பிள்ளைகள்ஆயிஷா ரோல்ப்சன், ஜான் ரோல்ப்சன்
வலைத்தளம்
ilse-koehler-rollefson.com

வாழ்க்கை

தொகு

இவர், தாவரவியல் பேராசிரியரான முனைவர் டைதார்ட் கோக்லர், பிரிஜிட் கோக்லர் ஆகியோரின் மகளாவர். இவர் ஜெர்மனியில் ஓபர்-ராம்ஸ்டாட் வெம்பாக்கில் குதிரைகள் மற்றும் அனைத்து வகையான பிற விலங்குகளுடன் வளர்ந்தார். விலங்குகள் மீதான அன்பின் காரணமாக, ஹன்னோவரில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் பயின்றார், 1971 இல் பட்டம் பெற்றார். கால்நடை மருத்துவத்தில் அனுபவங்களைப் பெற்ற பின்னர், ஜோர்தானில் அகழ்வாராய்ச்சிகளில் பணிபுரியும் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக ஆனார். இதில் அயின்ன் கசலின் கற்கால தளம் உட்பட இவர் பணிபுரிந்துள்ளார்.

ஜோர்தனில் இவர் ஒட்டகங்கள் மீதான தனது அன்பைக் கண்டுபிடித்தார். தொல்பொருள் பதிவில் நாடோடி வாழ்க்கை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு பெடோயின் குடும்பத்துடன் வாழ்ந்தார். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வளர்ப்பு செயல்முறை எவ்வாறு தொடர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள இது இவருக்கு உதவியது. 1981இல் 'ஒட்டக வளர்ப்பு' என்றாத் தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். ஒட்டக சமூக-பொருளாதாரம் மற்றும் மேலாண்மை முறைகளைப் படிப்பதற்காக 1990/91 ஆம் ஆண்டில் இந்தியக் கல்விக்கான அமெரிக்க நிறுவனத்தில் கூட்டுறவுக்காக இந்தியா வந்தபோது இவர் கவனிக்கப்பட்டார். தனது ஆராய்ச்சியின் போது, ரெய்கா மக்களுடன் இவர் இணைந்து பணியாற்றினார். அவர்களின் வாழ்க்கை பாரம்பரியமாக ஒட்டகங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரெய்கா இன மக்களால் ஒட்டகங்களை இனப்பெருக்கம் செய்ய முடியாது என்பதால், ஒட்டகங்கள் மறைந்து, பாரம்பரிய ஒட்டக கலாச்சாரம் இழக்கப்படுகிறது. [1]

விருது

தொகு
 
நரி சக்தி விருதைப் பெறும் இல்சு கோக்லர்-ரோல்ப்சன்

2002 ஆம் ஆண்டில் இவர் தனது பணிகளுக்காக ரோலக்ஸ் விருதைப் பெற்றார்.அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி 2017 மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு மதிப்புமிக்க நாரி சக்தி விருது வழங்கினார். [2]

படைப்புகள்

தொகு
  • A Field Manual of Camel Diseases: traditional and modern health care for the dromedary (co-author in 2001)[3]
  • Camel Karma: Twenty Years Among India's Camel Nomads (2014)[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Our lady of the camels - Rolex Awards". rolex.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-07.
  2. "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
  3. A field manual of camel diseases : traditional and modern health care for the dromedary. Mundy, Paul., Mathias, Evelyn., Köhler-Rollefson, Ilse. London: ITDG. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85339-503-1. இணையக் கணினி நூலக மைய எண் 42875459.{{cite book}}: CS1 maint: others (link)
  4. Köhler-Rollefson, Ilse (2014). Camel Karma: Twenty Years Among India's Camel Nomads (in ஆங்கிலம்). Tranquebar Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84030-63-6.

வெளி இணைப்புகள்

தொகு

www.ilse-koehler-rollefson.com www.pastoralpeoples.org www.camelcharisma.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்சு_கோக்லர்-ரோலெப்சன்&oldid=3122777" இலிருந்து மீள்விக்கப்பட்டது