இல்ஹாம் அலியேவ்

இல்ஹாம் ஐதர் ஓக்லு அலியேவ் (பிறப்பு:24 டிசம்பர் 1961), அசர்பைஜான் நாட்டின் 4வது அதிபர் ஆவர். அசர்பைஜானின் மூன்றாவது அதிபரான ஐதர் அலியேவ்வின் மரணத்திற்கு பிறகு 2003ல் அசர்பைஜான் நாட்டின் அதிபராக பதவியேற்றார். அஜர்பைஜான் எண்ணெய் வளம் மிக்கதாக இருப்பதால், இல்ஹாம் அலியேவின் ஆட்சியின் நிலைத்தன்மையை வலுப்படுத்தியது மற்றும் அஜர்பைஜானில் ஆளும் உயரடுக்கினரை வளப்படுத்தினர்.

இல்ஹாம் அலியேவ்
İlham Əliyev
2022இல் இல்ஹாம் அலியேவ்
4வது அசர்பைஜான் அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 அக்டோபர் 2003
முன்னையவர்ஐதர் அலியேவ்
7வது அசர்பைஜான் பிரதம அமைச்சர்
பதவியில்
4 ஆகஸ்டு 1993 – 31 அக்டோபர் 2003
குடியரசுத் தலைவர்ஐதர் அலியேவ்
புதிய அசர்பைஜான் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
2005
Deputyமெரிபன் அலியேவா
முன்னையவர்ஐதர் அலியேவ்
தலைமைச் செயலாளர், அணிசேரா இயக்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 அக்டோபர் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இல்ஹாம் ஐதர் ஒக்லு அலியேவ்

24 திசம்பர் 1961 (1961-12-24) (அகவை 62)
பக்கூ, அசர்பைஜான் சோசலிசக் குடியர்சு, சோவியத் ஒன்றியம்
தேசியம்அசர்பைஜானியர்
அரசியல் கட்சிபுதிய அசர்பைஜானியர் கட்சி
துணைவர்
மெரிபன் அலியேவா (தி. 1983)
பிள்ளைகள்லைலா அலியேவா
அர்சு அலியேவா
ஐதர்
பெற்றோர்ஐதர் அலியேவ்
சாரிபா அலியேவ்
முன்னாள் கல்லூரிமாஸ்கோ அரசு பன்னாட்டு உறவுகள் நிறுவனம்
கையெழுத்து

அலியேவின் குடும்பம் அரசு நடத்தும் வணிகங்களுடனான உறவுகளின் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டது. இக்குடும்பத்தினர் பல முக்கிய அஜர்பைஜான் வங்கிகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறார்கள். மேலும் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களை ஓரளவுக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்கள். கடல்சார் நிறுவனங்களின் விரிவான வலைப்பின்னல் மூலம் செல்வத்தின் பெரும்பகுதி மறைத்து வைத்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தால் அதிபர் இல்ஹாம் அலியேவ் 'ஆண்டின் சிறந்த நபர்' என்று அறியப்பட்டார்.[1] 2017ஆம் ஆண்டில், அலியேவ் மற்றும் அவரது குடும்பத்தினர் அஜர்பைஜானில் பண மோசடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இது அலியேவ் மீதான விமர்சனங்களைத் திசைதிருப்பவும் அவரது ஆட்சியின் நேர்மறையான தோற்றத்தை மேம்படுத்தவும் முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு பணம் செலுத்துவதற்கான சிக்கலான பணமோசடி திட்டமாகும்.

பல பார்வையாளர்கள் அதிபர் இல்ஹாம் அலியேவை ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கிறார்கள்.[2][3][4][5][6][7] அவர் அஜர்பைஜானில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஆள்கிறார்; தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இல்லை, அரசியல் அதிகாரம் அலியேவ் மற்றும் அவரது குடும்பத்தாரின் கைகளில் குவிந்துள்ளது, ஊழல் மலிந்துள்ளது, மனித உரிமை மீறல்கள் கடுமையாக உள்ளன (சித்திரவதை, தன்னிச்சையான கைதுகள், அத்துடன் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை துன்புறுத்துதல் உட்பட). இல்ஹாம் அலியேவ் இருந்தபோது நாகோர்னோ-கராபாக் மோதல் தொடர்ந்தது மற்றும் 2020இல் ஒரு முழு அளவிலான போராக உச்சக்கட்டத்தை அடைந்தது. இதில் அஜர்பைஜான் முதன்முதலாக நாகோர்னோ-கராபாக் பகுதியைச் சுற்றியுள்ள ஆர்மேனியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது மீண்டும் கட்டுப்பாட்டை பெற்றது.

சமயக் கொள்கை

தொகு

10 சனவரி 2017 அன்று 2017ஆம் ஆண்டை இசுலாமிய ஒற்றுமை ஆண்டாக அறிவித்ததுடன், விளையாட்டு நிகழ்வுகளுக்கு நிதியை ஒதுக்கினார்.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. ""Ilham Aliyev, 2012 Person of the Year in organised crime and corruption". Organized Crime and Corruption Reporting Project. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  2. Turp-Balazs, Craig (2021-03-17). "Alexander Lukashenko is a dictator, but he is not Europe's last". Emerging Europe (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  3. Neukirch, Ralf (2012-01-04). "A Dictator's Dream: Azerbaijan Seeks to Burnish Image Ahead of Eurovision" (in en). Der Spiegel. https://www.spiegel.de/international/world/a-dictator-s-dream-azerbaijan-seeks-to-burnish-image-ahead-of-eurovision-a-806769.html. 
  4. Rubin, Michael (2021-10-22). "Azerbaijan's Aliyev is a strategic liability, not an asset". The National Interest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  5. "French court backs media description of Aliyev as a "dictator"". The Central Asia & South Caucasus Bulletin (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  6. "Autocrats take advantage of coronavirus". Council on Foreign Relations (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  7. Hunder, Max. "Azerbaijan's dissenting voices face imprisonment and worse". Kyiv Post இம் மூலத்தில் இருந்து 2024-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240213090544/https://archive.kyivpost.com/business/azerbaijans-dissenting-voices-face-imprisonment-and-worse.html. 
  8. "Azərbaycan Prezidentinin Rəsmi internet səhifəsi - SƏNƏDLƏR » Sərəncamlar 2017-ci ilin Azərbaycan Respublikasında "İslam Həmrəyliyi İli" elan edilməsi haqqında Azərbaycan Respublikası Prezidentinin Sərəncamı". www.president.az. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
  9. "2761 - 2017-ci ilin Azərbaycan Respublikasında "İslam Həmrəyliyi İli" elan edilməsi ilə əlaqədar Qafqaz Müsəlmanları İdarəsi tərəfindən keçiriləcək bir sıra tədbirlərin maddi təminatı haqqında". e-qanun.az. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்ஹாம்_அலியேவ்&oldid=4110076" இலிருந்து மீள்விக்கப்பட்டது