இளஞ்சிவப்புக் காய்ப்புழு

பூச்சி இனம்
இளஞ்சிவப்புக் காய்ப்புழு
Pink bollworm
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்குலகம்
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி. காசிப்பியெல்லா
இருசொற் பெயரீடு
பெக்டினோஃபோரா காசிப்பியெல்லா
(சவுண்டர்சு, 1844)
வேறு பெயர்கள்
  • டிப்ரெசாரியா காசிப்பியெல்லா ஆவுண்டர்சு, 1844
  • கிளிச்சியா காசிப்பியெல்லா
  • பிளாட்டியேடா காசிப்பியெல்லா
  • கிளிச்சியாஆம்பிரிபென்னிசு வால்சிங்காம், 1885

இளஞ்சிவப்பு காய்ப்புழு (Pectinophora gossypiella) பருத்திச் செடியில் அதன் காயைத் தாக்கும் ஒரு புழுவாகும். இதன் அந்துப்பூச்சிகள் சிறிய, மெல்லிய, சாம்பல் நிறத்தில் இறக்கையுடன் இருக்கும். இதன் இளவுயிரி எட்டு இணைக் கால்களுடன் மங்கிய வெண்ணிறத்துடன் இருக்கும். [1] இதன் முதுகில் இளஞ்சிவப்பு பட்டை அமைந்திருக்கும். இளவுயிரி அரை அங்குலம் நீளம் வரை வளரும்.

பெண் அந்துப்பூச்சிகள் குவியல் குவியலான முட்டைகளைப் பூ மொட்டுக்கள், பூக்கள், காய்கள் ஆகியவற்றின் மேல் இடும். முட்டையிலிருந்து இளவுயிரி உணவுக்காக பஞ்சூடாக விதைகளை தாக்கும்போது பஞ்சு கறை படிந்து, பஞ்சின் தரம் குறையும். பருத்திக்கயின் பொதி நாரிழைக்கும் விதை பருத்தி விதை எண்ணெய்க்கும் பயன்படுவதால் இருவகைச் சேதங்கள் ஏற்படுகின்றன. காயின் சுற்றியுள்ள காப்புறையைளழிப்பதால் பிற பூச்சிகளும் பூஞ்சயும் எளிதாக தாக்க வழி ஏற்படுகிறது.

இது ஆசியாவிற்குச் சொந்தமானது, ஆனால் தற்பொழுது உலகின் பருத்தி வளரும் பகுதிகளில் பெரும்பாலான நாடுகளில் ஊடுருவி இனமாக மாறிவிட்டது. இது 1920 களில் தென்னமெரிக்காவின் பருத்தி விளையும் பகுதிகளில் பரவியது. இது தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் பருத்தியைப் பெரிதும் தாக்கும் பூச்சியாகும்.[2] 2018 இல் ஐக்கிய அமெரிக்க வேளாண்மைத் துறை[3] மபந்திருத்த பீட்டி பருத்தியை அறிமுகப்படுத்தல், சூழலில் மலடாக்கிய ஆண் அந்துப் புச்சிகளை பரவவிடுதால் ஆகிய இருவகை கூட்டுமுறைகளால் ஐக்கிய அமெரிக்காவில் இந்நோயை நீக்கியதாக அறிவித்தது.[4]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Pink Bollworm - Texas A&M Department of Entomology". Texas A&M Department of Entomology. Archived from the original on 2022-12-09. பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.
  2. உதவிக் கரம் தமிழ் திசை 16 மார்ச் 2019
  3. "USDA Announces Pink Bollworm Eradication Significantly Saving Cotton Farmers in Yearly Control Costs".
  4. Tabashnik, Bruce E.; Liesner, Leighton R.; Ellsworth, Peter C.; Unnithan, Gopalan C.; Fabrick, Jeffrey A.; Naranjo, Steven E.; Li, Xianchun; Dennehy, Timothy J. et al. (2021-01-05). "Transgenic cotton and sterile insect releases synergize eradication of pink bollworm a century after it invaded the United States" (in en). Proceedings of the National Academy of Sciences 118 (1): e2019115118. doi:10.1073/pnas.2019115118. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:33443170. 

பொது மேற்கோள்கள்

தொகு
  • New Standard Encyclopedia, © 1990 Chicago, Illinois

வெளி இணைப்புகள்

தொகு