இளையராஜாவின் ரசிகை

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இளையராஜாவின் ரசிகை (Illayarajavin Rasigai) என்பது 1979 ஆண்டில் முடிக்கப்பட்டும் வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் சிவசந்திரன், எம். ஜி. சி. சுகுமார், உன்னி மேரி, ஈ. வி. சரோஜா, ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் நடிக்க இரட்டையர்களான தேவராஜ்-மோகன் ஆகியோர் இயக்கினர். இப்படத்தை எம். சி. அரவிந்தன், எம். பி. சீனிவாசன், யு. சதானந்தன் ஆகியோர் அரவிந்த் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்தனர்.

இளையராஜாவின் ரசிகை
இசைத்தட்டு அட்டை
இயக்கம்தேவராஜ்-மோகன்
இசைஇளையராஜா
நடிப்புசிவசந்திரன்
எம். ஜி. சி. சுகுமார்
உன்னி மேரி
ஈ. வி. சரோஜா
கலையகம்அரவிந்த் பிலிம்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இசை தொகு

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1]

பாடல் பாடகர்கள் வரிகள் பாடல் நேரம்
"ஆகா இருட்டு நேரம்" எஸ். ஜானகி, பி. ஜெயச்சந்திரன் கங்கை அமரன் 4:51
"எந்த ஆத்து பையன்" எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 4:41
"மாலை செவ்வானம்" இளையராஜா, ஜென்ஸி புலமைப்பித்தன் 4:54
"போடுரா நைனா போடு" எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் குழுவினர் வாலி 4:40

குறிப்புகள் தொகு

  1. "இளயராஜாவின் ரசிகை". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையராஜாவின்_ரசிகை&oldid=3873217" இலிருந்து மீள்விக்கப்பட்டது