உன்னி மேரி

இந்திய நடிகை

உன்னி மேரி ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளப் திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]

தீபா உன்னிமேரி
பிறப்புஉன்னி மேரி
எர்ணாகுளம், கேரளா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1972–1992
பெற்றோர்பிரான்சிஸ். விக்டோரியா
வாழ்க்கைத்
துணை
ரிஜாய் (1982–தற்போது)
பிள்ளைகள்நிர்மல்

சில புகழ்பெற்ற தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படங்களில் உன்னிமேரி என்பதற்குப் பதிலாக தீபா என்ற பெயரில் நடித்துள்ளார். 1962ல் பிறந்த இவர் 1982ல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில், ஐயப்பன், மல்லனும் மாதேவனும், கண்ணப்பனுண்ணி (திரைப்படம்), மகாபலி சக்கரவர்த்தி போன்ற மலையாளப் படங்களிலும், அந்தரங்கம், உல்லாசப்பறவைகள், ஜானி, மீண்டும் கோகிலா, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, முந்தானை முடிச்சு, கல்யாணப்பறவைகள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னி_மேரி&oldid=4083972" இலிருந்து மீள்விக்கப்பட்டது