சிவசந்திரன்

இந்திய நடிகர், இயக்குநர், எழுத்தாளர்

நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது திரைப் பெயரான சிவச்சந்திரன் (Sivachandran) என்பதன் மூலம் சிறப்பாக அறியப்படுகிறார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர் ஆவார்.

சிவசந்திரன்
பிறப்புநாராயணன்
பணிநடிகர், இயக்குநர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1976–1999
வாழ்க்கைத்
துணை
லட்சுமி (தி. 1987)
பிள்ளைகள்சம்யுக்தா
(2000இல் தத்தெடுதது)

தொழில்தொகு

சிவச்சந்திரன் பட்டினப்பிரவேசம் (1977) திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார்.[1] பின்னர் அன்னபூரணி (1978) படத்தில் ஆர். முத்துராமனுடன் எதிர்மறை வேடத்தில் நடித்தார். அவள் அப்படித்தான் (1978) மற்றும் பொல்லாதவன் (1980) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார்.[2] என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் , பிரபுவின் பல படங்களை இயக்கியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சிவச்சந்திரன் என்று பெயரை மாற்றி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த திரைப் பெயரானது சிவாஜி கணேசனிடமிருந்து "சிவா"வையும் எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து "சந்திரன்" என்பதையும் இணைத்து உருவாக்கபட்டதாகும்.[3]

என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை லட்சுமியை காதலித்தார். அவர்கள் இருவரும் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர்.[2]இவர் மீண்டும் இயக்கிய இரத்த தானம் (1988), ஜோடி சேந்தாச்சு (1992) ஆகிய படங்களில் மீண்டும் லட்சுமியுடன் சேர்ந்து பணியாற்றினார். சிவச்சந்திரனும் லட்சுமியும் 2000 ஆம் ஆண்டில் சம்யுக்தா என்ற பெண்ணை தத்தெடுத்தனர்.

திரைப்படவியல்தொகு

நடிகராகதொகு

படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு Ref.
1976 இது இவர்களின் கதை
1977 பட்டினப்பிரவேசம் குமரன்
1978 அவள் அப்படித்தான் மனோ
அன்னபூரணி
1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி மாணிக்கம்
பஞ்ச கல்யாணி
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
1980 துணிவே தோழன்
மங்கல நாயகி
நட்சத்திரம்
சௌந்தர்யமே வருக வருக
வண்டிச்சக்கரம் சாரதி
பொல்லாதவன் சந்துரு
1981 ராம் லட்சுமண் குமார்
ராணித்தேனீ சேகர்
நெல்லிக்கனி
நெஞ்சில் ஒரு முள்
1982 ஆனந்த ராகம்
பார்வையின் மறுபக்கம் சிவா
கடவுளுக்கு ஒரு கடிதம்
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
சிம்லா ஸ்பெஷல் திருடன்
1983 வெள்ளை ரோஜா சின்னதுரை
சிவப்பு சூரியன் சிவா
தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
1984 ராஜதந்திரம் கஜேந்திரன்
அன்பே ஓடிவா
எழுதாத சட்டங்கள்
அந்த ஜூன் பதினாறாம் நாள்
அந்த உறவுக்கு சாட்சி
ஓ மானே மானே ஜோசப்
நாளை உனது நாள் விவேகானந்தன் (பிரகாஷ்)
வம்ச விளக்கு ரவி
1985 நவக்கிரக நாயகி
நாம் இருவர்
நீதியின் நிழல் சுகுமார்
தென்றல் தொடாத மலர்
1986 டிசம்பர் பூக்கள்
பொய் முகங்கள்
முரட்டு கரங்கள் ரகுமான்
ஒரு இனிய உதயம் சிவா
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
மங்கை ஒரு கங்கை
ஆனந்த் உரையாடல் எழுத்தாளராகவும்
1988 என் உயிர் கண்ணம்மா மாதவன் இயக்குநராகவும்
இரத்த தானம் இயக்குநராகவும்
1990 நியாயங்கள் ஜெயிக்கட்டும் விக்டர்ராஜ் இயக்குநராகவும் [4]
1992 ஜோடி சேந்தாச்சு
1995 கட்டுமரக்காரன் விஜய் ராகவன்
தொலைக்காட்சி
  • அரசி (சன் தொலைக்காட்சி)
  • மகாலட்சுமி (கலைஞர் தொலைக்காட்சி)

இயக்குநராகதொகு

கதை எழுத்தாளராகதொகு

உரையாடல் எழுத்தாளராகதொகு

குறிப்புகள்தொகு

  1. Mohan Raman (3 January 2015). "KB: Kollywood’s Discovery Channel". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/kb-kollywoods-discovery-channel/article6751541.ece. 
  2. 2.0 2.1 "Sivachandran". Antrukandamugam. 23 August 2013. 10 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. Hindu Tamil Thisai (18 November 2019). ""பாரதிராஜா தந்த வாய்ப்பை மறுத்தேன்" – Exclusive Interview With Siva Chandran | Rewind With Ramji". 10 April 2020 அன்று பார்க்கப்பட்டது – YouTube வழியாக.
  4. Krishnaswamy, N. (8 June 1990). "Nyayangal Jayikkattum". இந்தியன் எக்சுபிரசு: p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900608&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசந்திரன்&oldid=3315701" இருந்து மீள்விக்கப்பட்டது