பார்வையின் மறுபக்கம்

1982 திரைப்படம்

பார்வையின் மறுப்பக்கம் (Parvaiyin Marupakkam) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படம் இப்னாடிசத்தை அடிப்படையாக கொண்டது. கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இப்படத்தில் எம். என். நம்பியார், ஸ்ரீபிரியா, சிவசந்திரன், சில்க் ஸ்மிதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் பார்த்திபன், ரோகிணி ஆகியோர் அவர்களின் தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில், துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

பார்வையின் மறுபக்கம்
இயக்கம்கே. எம். பாலகிருஷ்ணன்
தயாரிப்புபழனி டி. சி. இராமக்கிருஷ்ணன்
திரைக்கதைஎம். சிராஜுதீன்
இசைசந்திரபோஸ்
நடிப்புவிசயகாந்து
சிறீபிரியா
மா. நா. நம்பியார்
சிவசந்திரன்
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
ஆர். இரகுநாத ரெட்டி
கலையகம்கண்மணி கிரியேசன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 19, 1982 (1982-February-19)[1]
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

இசை தொகு

இந்தப் படத்தின் பாடல்களுக்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார். பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதினர்.[4][5]

பாடல் பாடகர்கள்
"தேவதை புரியும் தவங்கள்" பி. சுசீலா
"பூவாச்சு பூத்துவந்து மாசம்" பி.ஜெயச்சந்திரன்
"சந்தோச நேரங்கள் சங்கீதம்" பி. சுசீலா
"பார்வையின் மறுபக்கம்" வாணி ஜெயராம்

குறிப்புகள் தொகு