நாம் இருவர் (1985 திரைப்படம்)
நாம் இருவர் (Naam Iruvar) என்பது 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இப்படத்தை ஏவிஎம் குமரன் தயாரித்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, ஊர்வசி, சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார்.[1][2][3][4] இப்படமானது கன்னட படமான இராமபுரதா இராவணா, என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும்.[5] இது நடிகர் சிவாஜி கணேசனின் 250வது திரைப்படம் ஆகும்.[6]
நாம் இருவர் Naam Iruvar | |
---|---|
விளம்பரத்தட்டி | |
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | ஏ. வி. எம். குமரன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பிரபு ஊர்வசி சார்லி |
ஒளிப்பதிவு | விஸ்வம் நடராஜ் |
விநியோகம் | ஏவிஎம் |
வெளியீடு | மார்ச்சு 8, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரய்யா ( சிவாஜி கணேசன் ) ஒரு ஓய்வுபெற்ற குடிகார இராணுவ வீரர் ஆவார். அவர் தன் மகள் இராதா ( ஊர்வசி ) உடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். ஊருக்கு வரும் புதிய ஆசிரியரான ராஜாவுக்கு ( பிரபு ) பள்ளியின் அறங்காவலரான சிவகாமி ( ஸ்ரீவித்யா ) வீட்டில் தங்குவதற்கு இடம் வழங்கப்படுகிறது. வீரய்யாவும் சிவகாமியும் முன்பு காதலித்தவர்கள் ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அவளுடைய தந்தை சோமசுந்தரம் ( வி. எஸ். ராகவன் ) ஊரின் முக்கியப் பிரமுகராக இருந்தார். வீரய்யாவின் வசதி இன்மை, கல்வியறிவின்மை போன்றவற்றால் அவர்களின் காதலுக்கு குறுக்கே நின்றார். இதனால் சிவகாமி தன் தந்தை பார்த்த மாப்பிள்ளையை மணக்கத் தயாராhsuqர். ஆனால் திருமண நாளில் அவர் இறந்துவிடுகிறார். இதனால் அவள் திருமணம் நின்றுவிடுகிறது. வீரய்யா காதல் தோல்வியினால் ஊரை விட்டு வெளியேறி இராணுவத்தில் சேர்ந்துவிடுகிறார். பெரியதுரை (வி. கே. ராமசாமி ) ஊர் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக அவர் போராடிக் கொண்டும், குடித்துக்கொண்டும் நாட்களைக் கழித்துவருகிறார். பெரியதுரை போதைப்பொருட்களை கடத்துதல், கள்ள நோட்டு அச்சிடுதல் போன்ற குற்றங்களை செய்துவருகிறார். தான் பணக்காரராகவும் செல்வாக்கு உள்ளவராகவும் இருக்க ஊரில் இடைஞ்சலாக இருப்பவர்களைக் கொல்கிறார். மேலும் அவர் தன் தம்பி செல்லதுரை ( சிவசந்திரன் ), இல்லக்கிழத்தி மயிலு ( கோவை சரளா ), வலது கையான பாப்போ ( வெண்ணிற ஆடை மூர்த்தி ) ஆகியோரின் தவறான செயல்களுக்கு ஆதரவாக உள்ளார். ராஜாவின் தலையீட்டுக்குப் பிறகு வீரையா குடிப்பழக்கத்தை விட்டுவிடுகிறார். மேலும் ராஜா வீரய்யாவுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்குகிறார். ராதாவும் ராஜாவும் காதலிக்கிறார்கள். பள்ளியை மேம்படுத்த ஊர் மக்கள் சேகரிக்கும் பணத்தை திருட பெரியதுரை திட்டமிடுகிறார். அவருடைய இந்த திட்டத்தை ஊராட்சி மன்ற செயல் அலுவலரும், சிவகாமியின் சகோதரருமான ராமலிங்கம் ( வி. கோபாலகிருஷ்ணன் ) கண்டுபிடிக்கிறார். பெரியதுரையின் கும்பல் ராமலிங்கத்தைக் கொன்று அவருக்கு திருட்டுப் பட்டத்தையும் கட்டிவிடுகின்றனர். இது சிவகாமி, வீரய்யா, ராஜா ஆகியோரை பெரியாரதுரைக்கு எதிராக கூட்டணி அமைக்க காரணமாகிறது. இதன் பிறகு இந்த மூவரும் சேர்ந்து பெரியதுரையின் தவறான செயல்களை வெளிக்கொணர்ந்து அவரை நீதியின் முன் நிறுத்துகின்றனர்.
நடிப்பு
தொகு- சிவாஜி கணேசன் விரைய்யாவாக
- பிரபு -ராஜா / சங்கர்
- ஊர்வசி -இராதாவாக
- ஸ்ரீவித்யா -சிவகாமியாக
- வி. கே. ராமசாமி -பெரியதுரையாக
- சார்லி -சாமிபிள்ளையாக
- சிவசந்திரன் -செல்லதுரையாக
- கோவை சரளா -மயிலுவாக
- வெண்ணிற ஆடை மூர்த்தி -பபோவாக
- வி. கோபாலகிருட்டிணன் -இராமலிங்கமாக
- லூசு மோகன் -கோவிந்தனாக
- அனுராதா கோவிந்தனின் மனைவியாக
- வி. எஸ். ராகவன் -சோமச்ந்தரமாக
- ஜெயமாலினி ஒரு குத்தாட்ட பாடலில் ஆடியுள்ளார்
- சுரேஷ் சக்கரவர்த்தி
இசை
தொகுஇப்படத்திற்கான இசையை கங்கை அமரன் அமைத்தார்.[7]
- "திருவிழா" - பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா
- "ஒண்ணுதான்" - எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
- "போட்டேன் இஞ்சி" - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
குறிப்புகள்
தொகு- ↑ "Naam Iruvar". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Naam Iruvar". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Naam Iruvar". gomolo.com. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ "Naam Iruvar". nadigarthilagam.com. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/photo-features/top-ten-kannada-films-to-have-been-remade/top-ten-kannada-films-to-have-been-remade/photostory/27975343.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
- ↑ https://itunes.apple.com/in/album/naam-iruvar-original-motion-picture-soundtrack/1364856921