பொய் முகங்கள்
பொய் முகங்கள் (Poi Mugangal) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சி. வி. இராசேந்திரன் இயக்கிய இந்த படத்தில் ராகேஷ் (தமிழில் அறிமுகம்), சுலக்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ராகேஷ் முன்பு தமிழில் படிக்காதவன் (1985) படத்தை, தனது உண்மையான பெயரான வி. ரவிச்சந்திரன் என்ற பெயரில் தயாரித்தார். பொய் முகங்கள் படமானது சுஜாதாவின் காகித சங்கிலிகள் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படமானது பிரேமாஸ்த்ரா (1982), நானே ராஜா (1984) ஆகிய படங்களை அடுத்து ரவிச்சந்திரன், ராஜேந்திரன், இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் ஆகியோர் இணையும் மூன்றாவது கூட்டணியாகும்.
பொய் முகங்கள் | |
---|---|
இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
தயாரிப்பு | பி. இராமதாஸ் எஸ். பங்காருசாமி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
கலையகம் | பிரீத்தி கிரியேசன்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 28, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுசிறுநீரகங்கள் பாதிக்கபட்ட ஒரு இளைஞன் மாற்று சிறுநீரகத்துக்காக தன் மனைவியின் இரத்த உறவினர்களிடம் கெஞ்சி காத்திருப்பது பற்றிய கதை.
நடிப்பு
தொகு- ராகேஷ் ராஜாவாக
- சுலக்சனா இந்துவாக
- ஒய். ஜி. மகேந்திரன்
- சிவசந்திரன்
- அருந்ததி
- வி. எஸ். ராகவன்
- வி. கோபாலகிருஷ்ணன்
தயாரிப்பு
தொகுகன்னட நடிகரான வீ. ரவிச்சந்திரன் தமிழில் அறிமுகமாகும் போது தமிழ் நடிகர் ரவிச்சந்திரனுடன் பெயர் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க ராகேஷ் என்று பெயரில் அறிமுகமானார். இந்த படமானது சுஜாதாவின் காகித சங்கிலிகள் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. முன்னதாக பஞ்சு அருணாசலம் இந்த புதினத்தை திரைப்படமாக ஆக்கும் உரிமையை வாங்கி, அதே பெயரில் சுமன், அம்பிகா ஆகியோரது நடிப்பில் படத்தை துவக்கினர். இருப்பினும், படமானது தயாரிப்பின் பாதியிலேயே நின்றுவிட்டது.[1]
இசை
தொகுஇபடத்தின் பாடல்களுக்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர்.[2]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "தொட்டுக் கொண்டால் ஒரு இன்பம் புன்னகை" | கே. ஜே. யேசுதாஸ் | 4:33 | |
2. | "மேகம் ரெண்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 | |
3. | "இங்கே நாம் காணும் பாசம் எல்லாம்" | கே. ஜே. ஏசுதாஸ் | 4:46 | |
4. | "உத்தம் புது பாட்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 4:07 | |
மொத்த நீளம்: |
17:12 |
குறிப்புகள்
தொகு- ↑ "Cine Quiz". Hub.
- ↑ "Poi Mukangal" – via Amazon.