பஞ்ச கல்யாணி
பஞ்ச கல்யாணி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சம்பந்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், வசந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பஞ்ச கல்யாணி | |
---|---|
இயக்கம் | என். சம்பந்தம் |
தயாரிப்பு | உடந்தை மணாளன் யு. எம். புரொடக்ஷன்ஸ் |
இசை | ஷியாம் |
நடிப்பு | சிவசந்திரன் வசந்தி |
வெளியீடு | ஆகத்து 3, 1979 |
நீளம் | 3785 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான கல்யாணி என்ற பெயரில் கழுதை நடித்துள்ளது. கடையில் சென்று பொருள் வாங்குவது, நாயகி கிணற்றில் விழும் பொழுது கயிறு கொடுத்து காப்பாற்றுவது, நீல பொடியை தண்ணீரில் கலப்பது போன்ற பல்வேறு காட்சிகளில் கழுதை நடித்துள்ளது. இவ்வாறு கழுதையை நடிக்க பழக்கியவரின் பெயர் பெங்களூரு கணபதி என்பதாகும்.
நடிகர்கள்
தொகு- சிவச்சந்திரன் - ஊர் தலைவர் மகன்
- எம். எஸ். வசந்தி - பஞ்சவர்ணம்
- எம். ஆர். ஆர். வாசு- ஊர் தலைவர்
- ஐசரி வேலன் (கௌரவ கதாபாத்திரம்)
- கே. ஏ. தங்கவேலு
- காந்திமதி
- எஸ். வி. ராமதாஸ்
- ஏ. கருணாநிதி
- பிராக்கெட் மோகன்
- ஐ எஸ் ஆர்
- அம்மு குட்டி புஷ்பமாலா
- ஜூனியர் மனோரமா
- சக்திவேல்
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- முத்துகிருஷ்ணன் தீன் இக்பால்
- வெண்காடு தாரா
- லட்சுமி புகழ் சென்னா
- ஜெய்ஹரி
- ராஜவேலு
- சண்முகம்
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நாயகியான பஞ்சவர்ணம் ஒரு அனாதை. அவள் கல்யாணி என்ற கழுதையை வைத்துக்கொண்டு ஊருக்குள் அழுக்குத் துணிகளை வாங்கி வெளுக்கும் வேலைகளை செய்து வருகிறார். நாயகியின் உடன் இருக்கும் கல்யாணி என்ற கழுதை சற்று அறிவு கூர்மையுடன் நடந்து கொள்கிறது. பஞ்சாயத்து தலைவரின் தோட்டத்திலே நடக்கக்கூடிய தேங்காய் கொள்ளையை தடுத்து விடுகிறது. கள்ள சாராய பானையை உதைத்து உடைக்கின்றது. ஊருக்குள் தவறான நடத்தையுடன் இருக்கக்கூடிய ஜோடிகளை அவர்கள் மனைவியிடம் காட்டிக் கொடுக்கின்றது. இவ்வாறு தொடர்ந்து நாயகன் போல கழுதையானது நன்மை செய்கின்றது.
பஞ்சாயத்து தலைவரின் மகனான நாயகன் பஞ்சவர்ணத்தை காதல் செய்கின்றார். அதனை பிடிக்காத பஞ்சாயத்து தலைவர் மகனை கண்டித்தும் பஞ்சவர்ணத்தை கொலை செய்யவும் துணிகிறார். இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொள்கிறனர்.