இலக்கு வீச்சு

(இழப்பு வீச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்கு வீச்சு (bowled) என்பது துடுப்பாட்டத்தில் இலக்கை நோக்கி வீசப்படும் வீச்சையும் அதன்மூலம் மட்டையாளரை வீழ்த்துவதையும் குறிக்கிறது.[1][2]

இலக்கு வீச்சால் மட்டையாடுபவர் ஆட்டமிழக்கும் காட்சி

பொதுவாக ஒரு பந்து வீச்சாளர் இலக்கை நோக்கி வீசும்போது அதை மட்டையாளர் இலக்கில் படாதவாறு தனது மட்டையால் தடுத்துக் காக்கிறார். ஆனால் அந்தப் பந்து இலக்கைத் தாக்கி அதன் இணைப்பான்களை விழச்செய்தால் அவர் ஆட்டமிழந்து விடுவார். அப்போது பந்து மட்டையிலோ பிற உடல் பாகத்திலோ பட்டிருந்தாலும் கருத்தில் கொள்ளப்படாது. எனவே இதற்கு மேல்முறையீடு தேவைப்படுவதில்லை. இலக்கு வீச்சால் ஆட்டமிழந்ததை உணர்ந்தவுடன் மட்டையாளர் தானாகவே களத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.

பிழை வீச்சு, அகல வீச்சு அல்லது செயலற்ற வீச்சு போன்ற வீச்சுகளின் மூலம் இலக்கு வீச்சு முறையில் ஆட்டமிழக்கச் செய்ய இயலாது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Shane Warne's 'Ball of the Century' turns 25". ICC. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019. On 4 June 1993, the legendary Australia leg-spinner bowled the iconic delivery to England's Mike Gatting to leave the cricketing world in disbelief.
  2. "Phillip Hughes inquest: Bowler Sean Abbott 'confused and upset' after death". BBC. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019. Sean Abbott felt "confused and upset" after he bowled the ball
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கு_வீச்சு&oldid=2902370" இலிருந்து மீள்விக்கப்பட்டது