இழை வலுவூட்டு சுதை

இழை வலுவூட்டிய காங்கிறீற்று (Fibre Reinforced Concrete) என்பது, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட இழைகளைக் காங்கிறீற்றுக் கலவையில் சேர்த்து உருவாக்கப்படும் காங்கிறீற்று ஆகும். இவ்விழைகள் கலவை முழுவதிலும் சீராகப் பரவியிருந்தாலும், அவற்றின் திசையொழுங்கு (orientation) ஒரே சீராக இல்லாமல் கண்டபடி (randomly) அமைந்திருக்கும். இழை வலுவூட்டிய காங்கிறீற்றுகளில் பயன்படும் இழைகள் பல்வேறு பொருட்களினால் ஆனவை. உருக்கு இழைகள், கண்ணாடி இழைகள், செயற்கை இழைகள், இயற்கை இழைகள் என்பன பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற இழைகளாகும். இழை உருவாக்கப் படும் பொருளைப் பொறுத்து மட்டுமன்றி, இழைகளின் வடிவம், அவற்றின் பரவல், திசையொழுங்கு, அடர்த்தி என்பனவும், உருவாகும் காங்கிறீற்றின் இயல்புகளைத் தீர்மானிக்கின்றன.[1][2][3]

காங்கிறீற்றில் கலக்கப்படும், இழைகளின் அளவு, முழுக் காங்கிறீற்றினதும் கனவளவின் விழுக்காடாக (நூற்றுவீதம்) அளக்கப்படுகின்றது. இது கனவளவுப் பின்னம் (Volume Fraction - Vf) எனப்படுகின்றது. கனவளவுப் பின்னம், பொதுவாக 0.1% இற்கும், 3% இற்கும் இடையில் இருப்பது வழக்கம். பயன்படுகின்ற இழைகளின் வெட்டுமுகத்தின் விட்டத்திற்கும், அதன் நீளத்திற்கும் இடையிலான விகிதம், aspect ratio எனப்படுகின்றது. இழையின் இழுவிசை தாங்கும் திறன், சாதாரண காங்கிறீற்றின் இழுவிசை தாங்கும் திறனிலும் அதிகமாக இருப்பின், குறிப்பிட்ட இழையால் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று, சாதாரண காங்கிறீற்றிலும் கூடிய இழுவிசையைத் தாங்கக்கூடியதாக இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழை_வலுவூட்டு_சுதை&oldid=4133267" இலிருந்து மீள்விக்கப்பட்டது