இவாஞ்சலிசிட்டா தோரிச்செல்லி
இவாஞ்சலிசிட்டா தோரிச்செல்லி (Evangelista Torricelli)(15 அக்டோபர் 1608 – 25 அக்டோபர் 1647) ஓர் இத்தாலிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற கலீலியோவின் மாணவர். காற்றழுத்தமானியைக் கண்டுபிடித்தற்காக அறியப்படுகின்றார், எனினும் இவர் ஒளியியலிலும் கணிதத்திலும் புதிய கருத்துகளைக் கண்டுபிடித்தவர்.
இவாஞ்சலிசிட்டா தோரிச்செல்லி | |
---|---|
இவாஞ்சலிசிட்டா தோரிச்செல்லி படம்.ஓவியர் இலாரன்சோ இலிப்பி'' (அண். 1647) | |
பிறப்பு | உரோம், Papal States | 15 அக்டோபர் 1608
இறப்பு | 25 அக்டோபர் 1647 புலோரன்சு, Grand Duchy of Tuscany | (அகவை 39)
தேசியம் | இத்தாலியர் |
துறை | இயற்பியல் கணிதம் |
பணியிடங்கள் | பீசா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | உரோமின் சாப்பியென்சா பல்கலைக்கழகம் |
Academic advisors | பெனிதெத்தோ காசுத்தெல்லி |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | விஞ்சென்சோ விவியனி |
அறியப்படுவது | காற்றழுத்தமானி தோரிச்செல்லி விதி தோர்ச்செல்லி வெற்றிடம் |
தாக்கம் செலுத்தியோர் | கலீலியோ கலிலை |
பின்பற்றுவோர் | இராபெத்து பாயில்[1] Blaise Pascal |
வாழ்க்கை வரலாறு
தொகுஇளமை
தொகுஇவாஞ்சலிசிட்டா தோரிச்செல்லி 1608 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் உரோம் நகரில் பிறந்தார். இவருடைய தா தந்தையராகிய காத்தரீனா அங்கெத்தி, காசுப்பரே தோரிச்செல்லி ஆகியோருக்கு முதல் மகவாகப் பிறந்தார். [2] இவருடைய குடும்பம் இரவென்னா மாநிலத்தின் பாயென்சா (Faenza) என்னும் ஊரில் இருந்து வந்தது. இவருடைய தந்தையார் துணி நெய்தல் தொழிலாளி. இவருடைய குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்தது. தம் மகன் இவாஞ்சலிசிட்டா தோரிச்செல்லி திறமையானவராக இருந்ததால் பெற்றோர்கள் மகனை பாயென்சாவில் இருந்த பெற்றொரின் உடன்பிறப்பாகிய காமல்தோலீசுத் துறவி (Camaldolese) கியாக்கோமோ அவர்களின் பொறுப்பில் அடிப்படைக் கல்வி கற்க அனுப்பினார்கள் பின்னர் 1624 இல் செசூட்டுக் கல்லூரியில் கணிதமும் மெயியியலும் படிக்க அனுப்பினார்கள். ஆனால் 1626 இல் தந்தை காசுபரே இறந்து போனார். பிறகு துறவி கியாக்கோமோ தோர்ச்செல்லியை உரோமில் இருந்த பெனடிக்டுடைன் துறவியாகிய பேராசிரியர் பெனெதெத்தோ காசுத்தெல்லி அவர்களிடன் அறிவியல் படிக்கச் சென்றார். பேராசிரியர் காசுத்தெல்லி சாப்பினென்சா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராக இருந்தவர்..[3][4] காசுத்தெல்லி கலீலியோவின் மாணவர்காக இருந்தவர்[5] பெனிதெத்தோ காசுத்தெல்லி ஓடும் நீரைப் பற்றி ஆய்வு செய்திருந்தார்(1628), போப்பாண்டவர் 8-ஆவது அருபன் (Pope Urban VIII) இவரிடம் நீரியல் சார்பான பணிகளை ஒப்படைத்திருந்தார்.[6] தோரிச்செல்லி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்திருந்தார் என்பதற்குச் சான்றுகள் இல்லை, ஆனால் காசுத்தெலி இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கின்றார். இவ்வுதவிக்காக அவரிடம் 1626 முதல் 1632 வரை தனி ஏற்பாடாக தோர்ச்செல்லி செயலாளராக இருந்தார் என்று கருதப்படுகின்றது.[7] இதனால் போப்பாண்டவர் நல்கையளித்த செய்முறை ஆய்வுகளில் அறிமுகம் ஏற்பட்டது
பணி
தொகுஇயற்பியல் ஆய்வுகள்
தொகுகலீலியோவின் இரு அறிவியல்கள் ( Two New Sciences)(1638) என்னும் படைப்பு தோரிச்செல்லியை இயங்கியல் கருத்துகளில் ஆர்வம் கொள்ளச்செய்தது. இவற்றை 1644 இல் அச்சிடப்பட்ட ஓப்பெரா சியோமெற்றிக்கா ( Opera geometrica, 1644) என்னும் நூலில் "டி மோட்டு" (De motu) என்னும் ஆய்வுரையில் பதிவு செய்துள்ளார். இதனை காசுத்தெல்லி 1641 இல் கலீலியோவுக்குத் தெரிவித்தார். அவருடைய பரிந்துரையில் தோரிச்செல்லி புளோரன்சுக்குச் சென்று கலீலியோவைச் சந்தித்து அவருடன் கடைசி 3 மாதங்கள் அவருடைய கருத்துப்பதிவாளராக இருந்தார்..[8]
காற்றழுத்தமானி கண்டுபிடிப்பு
தொகுதோரிச்செல்லியின் இயற்பியல் ஆய்வின் பயனாய் காற்று மண்டலத்தின் அழுத்தம் பற்றி பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன அதன் பயனாய் பாதரச காற்றழுத்தமானி கண்டுபிடிப்பும் நிகழ்ந்தது.[9]. இதன் கருத்துப் பின்புலத்தை 1631 இல் இரெனே தேக்கார்த்தே கூறியிருந்தார், ஆனால் அவர் ஏதும் கருவிகள் செய்ததற்கான சான்றுகள் கிடையா.[10]
தோரிச்செல்லி விதி
தொகுஒரு திறப்பின் வழியாக பாய்மம் ஓடும் விரைவைப் பற்றிய ஒரு விதியை தோரிசிச்செல்லி கண்டுபிடித்தார். இது பெர்னூலிக் கொள்கையின் ஒரு சிறப்பு நிலைக்கான விதி என்று அறியப்படுகின்றது. ஒரு கொள்கலத்திந் அடியே உள்ள துளை வழியாக நீர் வெளியேறும்பொழுது அதன் விரைவு நீரின் ஆழத்தின் வருக்க மூலத்துக்கு நேர்சார்புடையதாக இருக்கும் என்று கண்டுபிடித்தார். செங்குத்தான் உருளை வடிவில் கொள்கலம் இருந்தால், அதன் அடியில் ஒரு துளை இருந்தால் நீரின் ஆழம் y ஆக இருந்தால், காலம் t என்று கொண்டால்
மேலுள்ளதில் k > 0. என்பது ஒரு மாறிலி. [11]
கணிதவியல் ஆய்வுகள்
தொகுஅடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Marie Boas, Robert Boyle and Seventeenth-century Chemistry, CUP Archive, 1958, p. 43.
- ↑ Frank N. Magill (13 September 2013). The 17th and 18th Centuries: Dictionary of World Biography. Taylor & Francis. pp. 3060–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-92421-8.
- ↑ O'Connor, John J.; Robertson, Edmund F., "இவாஞ்சலிசிட்டா தோரிச்செல்லி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- ↑ Chisholm 1911.
- ↑ Robinson, Philip (March 1994). "Evangelista Torricelli". The Mathematical Gazette 78 (481): 37–47. doi:10.2307/3619429. https://archive.org/details/sim_mathematical-gazette_1994-03_78_481/page/37.
- ↑ Jervis-Smith, Frederick John (1908). Evangelista Torricelli. Oxford University Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781286262184.
- ↑ "Evangelista Torricelli". Turnbull world wide web server. J J O'Conno and E F Robertson. Archived from the original on 2016-05-17. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Torricelli, Evangelista". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 27. (1911). Cambridge University Press. 61–62.
- ↑ "Evangelista Torricelli".
- ↑ Timbs, John (1868). Wonderful Inventions: From the Mariner's Compass to the Electric Telegraph Cable. London: George Routledge and Sons. pp. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1172827800. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
- ↑ Driver, R. (May 1998). "Torricelli's Law: An Ideal Example of an Elementary ODE". The American Mathematical Monthly 105 (5): 454. doi:10.2307/3109809. https://archive.org/details/sim_american-mathematical-monthly_1998-05_105_5/page/454.