இவானா மரியா பர்டுடோ

இந்திய சதுரங்க வீராங்கனை

இவானா மரியா பர்டுடோ (Ivana Maria Furtado) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் கோவா இவருடைய சொந்த ஊராகும். 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சிறுவர் சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டுமுறை சாம்பியன் பட்டம் வென்றார். 2009 ஆம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தார். பிடே அளிக்கும் உலகத்தரவரிசைப் புள்ளிகளின் படி சனவரி 2012 இல் இவானாவின் புள்ளிகள் 2065 ஆகும். பெண் பிடே மாசுட்டர் என்ற பெருமையை இவர் 2011 ஆம் ஆண்டு ஈட்டினார் [1].

இவானா மரியா பர்டுடோ
இவானா மரியா பர்டுடோ, கோவா 2007
நாடுஇந்தியா
பிறப்பு1999 மார்ச்சு 16
பட்டம்பெண் பிடே மாசுட்டர் (2011)
பெண் வேட்பாள மாசுட்டர் (2008)
பிடே தரவுகோள்2212
(ஏப்ரல் 2015 பிடே பட்டியல்
உச்சத் தரவுகோள்2251 (டிசம்பர் 2014)

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 14 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்கப் போட்டியில் இவானா தங்கப் பதக்கம் வென்றார்[2].

2012 ஆம் ஆண்டு சூன் மாதம் தாசுகண்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க பெண்கள் சாம்பியன் பட்டப் போட்டியை வென்றதன் மூலம் பெண் கிராண்டு மாசுட்டர் ஆவதற்கான முதலாவது தகுதி நிலையை அடைந்தார்[3]. இப்பொழுது இவர் பெண்கள் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டத்துடன் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
  3. "Ivana Maria Furtado". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவானா_மரியா_பர்டுடோ&oldid=3544609" இலிருந்து மீள்விக்கப்பட்டது