இஷ்ரத் அஃப்ரீன்

இஷ்ரத் அஃப்ரீன் ( Ishrat Afreen ) (இஷ்ரத் ஆப்ரீன்) பிறப்பு 25 டிசம்பர் 1956) இவர் ஒரு உருது கவிஞர். இவரது படைப்புகள் ஆங்கிலம், யப்பானியம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கசல் பாடகர்களான ஜக்ஜீத் சிங் & சித்ரா சிங் ஆகிய இருவரும் இவரது கவிதைகளை தங்களின் இசைத்தொகுப்பு நிகழ்ச்சியான பியோண்ட் டைம் (1987) என்பதில் நிகழ்த்தினர். பிரித்தானிய-பாக்கித்தானி திரைப்பட நடிகர் ஜியா மொஹைதீன் தனது 17வது, 20வது தொகுதிகளிலும், தற்போதைய கச்சேரிகளிலும் இவரது கவிதைகளை வாசிக்கிறார்.

இஷ்ரத் அஃப்ரீன்
பிறப்பு25 டிசம்பர் 1956
கராச்சி, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
பணிஉருது கவிஞர், எழுத்தாளர்
அறியப்படுவதுPஉருது இலக்கியத்தில் பெண்ணிய இயக்கத்தின் கலை

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

இவர் தனது 14வது வயதில் 31 ஏப்ரல் 1971 அன்று டெய்லி ஜங் என்ற தினசரியில் முதன்முதலில் எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து எழுதிய இவரது கவிதைகள் இந்தியா மற்றும் பாக்கித்தான் முழுவதும் பல இலக்கிய இதழ்களில் வெளியிடப்பட்டது. இறுதியில் கவிஞர் பஹ்மிதா ரியாஸ் நடத்திவந்த ஆவாஸ் என்ற மாத இதழின் உதவி ஆசிரியரானார். இவரது எழுத்து வாழ்க்கைக்கு இணையாக 1970-1984 வரை பாக்கித்தான் வானொலியில் தேசிய மற்றும் உலகளவில் ஒளிபரப்பப்பட்ட பல வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் மிர்சா ஜமிலின் கீழ் பக்க தளவமைப்பு மென்பொருளான இன்பேஜிற்கான நஸ்தலீகு வரிவடிவத்தில் பணியாற்றினார்.

இஷ்ரத் அஃப்ரீன் தற்போது ஆஸ்டினின் இந்து உருது பிளாக்சிப் திட்டத்தில் ஆஸ்டின், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் முதன்மை உருது விரிவுரையாளராக உள்ளார். [1]

கல்வி

தொகு

அஃப்ரீன் தனது இளங்கலைக் கல்வியை கராச்சியில் உள்ள அல்லாமா இக்பால் அரசுக் கல்லூரியில் பயின்றார், பின்னர் பாக்கித்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் உருது இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஆகா கான் உறைவிடப் பள்ளியிலும் கற்பித்தார்.

வெளியீடுகள்

தொகு

அஃப்ரீன் குஞ்ச் பீலே பூலோன் கா (1985) மற்றும் தூப் அப்னே ஹிஸ்ஸே கி (2005) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இதைத் தவிர வீ சின்புல் வுமன் [2] என்ற மதிப்புமிக்க தொகுப்பில் இவரது கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. [3]

சான்றுகள்

தொகு
  1. "Hindi Urdu Flagship Program - About: Faculty & Staff". Archived from the original on 25 July 2010. பார்க்கப்பட்ட நாள் 31 May 2010.
  2. Ahmed, Rukhsana. Women's Press London, 1991.
  3. ASR Publications, 1990. Lahore, Pakistan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷ்ரத்_அஃப்ரீன்&oldid=4110144" இலிருந்து மீள்விக்கப்பட்டது