ஜக்ஜீத் சிங்

ஜக்ஜீத் சிங் (Jagjit Singh, பஞ்சாபி: ਜਗਜੀਤ ਸਿੰਘ, இந்தி: जगजीत सिंह) (பெப்ரவரி 8,1941அக்டோபர் 10,2011) ஓர் புகழ்பெற்ற இந்திய கசல் பாடகர் ஆவார். இசையைப்பாளராகவும் தொகுப்பாளராகவும் செயல்திறனாளராகவும் தொழில் முனைவராகவும் பல்திறப்பட்ட துறைகளிலும் தடம் பதித்தவர். "கசல் கிங்" என்றுப் பரவலாக அறியப்படும் ஜக்ஜீத் சிங் தமது மனைவியும் மற்றொரு புகழ்பெற்ற கசல் பாடகருமான சித்ரா சிங்குடன் இணைந்து 1970களிலும் 1980களிலும் இசைத்தட்டுக்கள் வெளியிட்டுள்ளார். இந்திய பதிவிசை வரலாற்றில் ஓர் கணவன்-மனைவி இணையாக இவ்வாறு இசை பதிவதற்கு இவர்களே முன்னோடிகளாக கருதப்படுகின்றனர். இவர் பஞ்சாபி, இந்தி, உருது, வங்காளம், குசராத்தி, சிந்தி மற்றும் நேபாளி மொழிகளில் பாடியுள்ளார். திரையிசை இல்லாத தனி இசைத்தொகுப்புகள் விற்பனையில் சாதனை படைத்துள்ளார்.

ஜக்ஜீத் சிங்
செப்டம்பர் 07, 2011இல் புவனேசுவரில் உள்ள ஜெய்தேவ் அரங்கில் ஜக்ஜீத்சிங்
பின்னணித் தகவல்கள்
பிறப்புபெப்ரவரி 8, 1941 (1941-02-08) (அகவை 82)
[[ஸ்ரீகங்காநகர்]], இராசத்தான், இந்தியா
இறப்பு10 அக்டோபர் 2011(2011-10-10) (அகவை 70)
மும்பை, இந்தியா
இசை வடிவங்கள்கசல், செவ்வியலிசை, பக்திப் பாடல்கள், கிராமிய இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர், திரையிசை இயக்குனர், செயல்திறனாளர், தொழில்முனைவர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, ஆர்மோனியம், தம்புரா, பியானோ
இசைத்துறையில்1966–2011
வெளியீட்டு நிறுவனங்கள்ஈஎம்வி, எச்எம்வி,சரிகம, யூனிவர்சல் மியூசிக், சோனி பிஎம்ஜி மியூசிக் என்டெர்டைன்மென்ட், பாலிடோர், டிப்ஸ், வீனஸ், டீ-சீரீஸ்

இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிசார் விருதான பத்ம பூசண்[1] இவருக்கு 2003ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இவருடைய 72-வது பிறந்த நாளன்று கூகிள் இந்திய இணையதளமானது இவருடைய புகைப்படத்துடன் கூடிய இலச்சினையை தன்னுடைய வலைதளத்தில் இடம்பெறச்செய்தது.[2][3]

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்ஜீத்_சிங்&oldid=3685161" இருந்து மீள்விக்கப்பட்டது