இசுதானா மெலாவத்தி

மலேசிய மாமன்னரின் இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லம்
(இஸ்தானா மெலாவத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுதானா மெலாவத்தி (மலாய்: Istana Melawati Putrajaya; ஆங்கிலம்: Melawati Palace); என்பது மலேசியாவின் மாமன்னரான யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) அவர்களின் இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லமாகும்.[1]

இசுதானா மெலாவத்தி
Istana Melawati Putrajaya
Melawati Palace
மெலாவத்தி அரண்மனை
இசுதானா மெலாவத்தி is located in மலேசியா
இசுதானா மெலாவத்தி
மலேசியாவில் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
வகைமலேசிய மாமன்னரின் 2-ஆவது அதிகாரப்பூர்வ அரண்மனை
(2002 - தற்போது)
கட்டிடக்கலை பாணிமலாய்
இஸ்லாமியம்
நகரம்புத்ராஜெயா கூட்டரசு அரசாங்கம்
நாடு மலேசியா
ஆள்கூற்று2°56′43″N 101°42′03″E / 2.94528°N 101.70083°E / 2.94528; 101.70083
தற்போதைய குடியிருப்பாளர்யாங் டி பெர்துவான் அகோங்
அடிக்கல் நாட்டுதல்1999
கட்டுமான ஆரம்பம்1999
நிறைவுற்றது2002
துவக்கம்2002
உரிமையாளர்மலேசிய அரசாங்கம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)புத்ராஜெயா கூட்டு நிறுவனம்
Senibahri Arkitek Sdn Bhd
முதன்மை ஒப்பந்தகாரர்புத்ராஜெயா கூட்டு நிறுவனம்
இஸ்தானா மெலாவத்தியின் பிரதான வாயில்

கோலாலம்பூர், டாமன்சாரா ஜாலான் துவாங்கு அப்துல் ஆலிம் (Jalan Tuanku Abdul Halim); எனும் டூத்தா சாலையில் (ஜாலான் டூத்தா - Jalan Duta) அமைந்துள்ள முதன்மை அரண்மனைக்கு அடுத்த நிலையில் இந்த இசுதானா மெலாவத்தி அரண்மனை உள்ளது.[2]

பொது

தொகு

பாரம்பரிய மலாய் அரச வடிவமைப்பில் அமைக்கப்பட்டு உள்ள அந்த அரண்மனை, மலேசியா நாட்டின் முதல் நவீன அரண்மனை ஆகும். மலாய் உலகத்துடன் சார்ந்த கட்டிடக் கலைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அரண்மனை ஐந்து அடுக்குக் கூரைகள் கொண்ட கட்டுமானமாகும்.

மலேசியா, புத்ராஜெயா கூட்டாட்சி பிரதேசத்தில் உள்ள ஓர் உயர்ந்த மலைச் சிகரத்தில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 125 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ள இந்த அரண்மனையில் இருந்து புத்ராஜெயாவின் முழுப் பகுதியையும் பார்க்கலாம்.

வரலாறு

தொகு

மெலாவத்தி அரண்மனை புத்ராஜெயாவின் 1-ஆவது புறநகர்ப் பகுதியில் (Precinct 1, Putrajaya) அமைந்துள்ளது. அரண்மனையின் கட்டுமானம் 1999-இல் தொடங்கி 2002-இல் நிறைவடைந்தது. இது ஓர் உல்லாச விடுதி அமைப்பைக் கொண்டுள்ளது. மாமன்னரின் ஓய்வுத் தளமாகவும் செயல்படுகிறது.

இந்த அரண்மனைக்கான பெயரை சிலாங்கூரின் மாமன்னர் சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா (Sultan Salahuddin Abdul Aziz Shah of Selangor) வழங்கினார். மெலாவத்தி (Melawati) என்றால் காவலர் கோபுரம் என்று பொருள்.

கட்டிடக்கலை

தொகு

இந்த அரண்மனையை செனி பகரி அர்கிடெக் (Senibahri Arkitek) கட்டிடக்கலை நிறுவனத்தைச் சேர்ந்த ராஜா கமருல் பகரின் (Raja Kamarul Bahrin) என்பவர் வடிவமைத்தார்.

மெலாவத்தி அரண்மனை நான்கு முக்கியக் கூறுகளை உள்ளடக்கியது:

  • அரச பிரிவு - தனியார் குடியிருப்பு (Royal Wing - Private quarters)
  • வரவேற்பு பிரிவு - சடங்கு வரவேற்பு மண்டபம் (Reception Wing - Ceremonial Reception Hall)
  • விருந்து பிரிவு - விருந்து நிகழ்ச்சிகள் (Banquet Wing - Functions)
  • நிர்வாகத் தொகுதி - அலுவலகங்கள் (Administrative Block - Offices)

உயரமான கோபுரங்கள்

தொகு

மூன்று உயரமான கோபுரங்கள் அரண்மனையின் பக்கத்திலும் மையத்திலும் ஒரு முக்கியமான அமைப்பை உருவாக்குகின்றன. இந்தக் கோபுரங்கள் இடைக்கால மலாய் அரண்மனைகளில் காணப்படும் பழைய காவல் கோபுரங்களைக் குறிக்கின்றன.

மூன்று அடுக்கு கூரைகள், கிழக்கு கடற்கரையின் மலாய் பாரம்பரிய கூரை வடிவமைப்புகளை பிரதிபலிக்கின்றன. அரண்மனைச் சந்திப்புக் கூடத்தில் (Meeting Wing), செங்கால் மரத்தால் (Chengal Wood) செய்யப்பட்ட ஒரு காவலர் கோபுரம் உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Istana Melawati is the second palace of His Majesty the Yang di-Pertuan Agong after Istana Negara. The construction of this palace began in 1999 and was completed in 2002. This palace has a resort concept and is the Hinggap Palace for the Yang di-Pertuan Agong". பார்க்கப்பட்ட நாள் 30 November 2022.
  2. "Jalan Tuanku Abdul Halim was known as Jalan Duta. Jalan Duta was renamed after Sultan Abdul Halim Mu'adzam Shah, the Sultan of Kedah, who was the only sultan so far, to be installed twice, being the 14th and 27th Yang di-Pertuan Agong of Malaysia". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 November 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுதானா_மெலாவத்தி&oldid=3902995" இலிருந்து மீள்விக்கப்பட்டது