இசுதானா சியார்கியா
இசுதானா சியார்கியா அல்லது சியார்கியா அரண்மனை (மலாய்: Istana Syarqiyyah; ஆங்கிலம்: Syarqiyyah palace ஜாவி: ايستان شرقية); என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின் மன்னரான சுல்தான் மிசான் சைனல் அபிடின் (Sultan Mizan Zainal Abidin) அவர்களின் அதிகாரப்பூர்வ அரண்மனையாகும்.[1]
இசுதானா சியார்கியா Istana Syarqiyyah Syarqiyyah Palace | |
---|---|
6 ஜூலை 2014 - அரண்மனைப் படம் | |
மலேசியாவில் அமைவிடம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | சுல்தான் திராங்கானு சுல்தானின் அதிகாரப்பூர்வ அரண்மனை |
இடம் | கோலா திராங்கானு, திராங்கானு, மலேசியா |
ஆள்கூற்று | 5°14′24″N 103°10′08″E / 5.24000°N 103.16889°E |
கட்டுமான ஆரம்பம் | 2006 |
நிறைவுற்றது | 2014 |
உரிமையாளர் | சுல்தான் மிசான் சைனல் அபிடின் (Sultan Mizan Zainal Abidin) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 3 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பில் பென்சுலே (Bill Bensley) |
இந்த அரண்மனை திராங்கானு, கோலா திராங்கானு, புக்கிட் செண்டரிங் (Bukit Chendering) எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை திராங்கானு சுல்தானின் முக்கியமான அரண்மனை; மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ விழாக்களும் இந்த அரண்மனையில் நடைபெறும்.
அரண்மனையின் உட்பகுதிக்குள் சுல்தான் மற்றும் திராங்கானுவின் அரச குடும்பங்களின் முக்கிய குடியிருப்புகள் உள்ளன. சியார்கியா (Syarqiyyah) என்ற பெயர் அரபு மொழியில் இருந்து பெறப்பட்டது.
'கிழக்கு ரத்தினம்' (East Gem) என்று பொருள்படும். இந்த அரண்மனை கட்டுவதற்கு RM 1 பில்லியன் செலவானது என்று அறியப் படுகிறது.[1]
கட்டுமானம்
தொகுஇந்த அரண்மனை 160,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. கட்டுமான வேலைகள் 2006-ஆம் ஆண்டு தொடங்கின. 2014 ஆம் ஆண்டில் முழுமையாக முடிக்கப்பட்டது. 4 கட்டங்களைக் கொண்டுள்ளது.
அரண்மனை வளாகத்தின் கட்டுமானத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மண் வேலைகள், தடுப்புச் சுவர்கள், குளங்கள், வடிகால், குழாய்கள், நிர்வாக அலுவலகம், விழா மண்டபம், நீர்க் குழாய்க் கூடம் மற்றும் மின் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களில் மண்வேலைகள், சடங்கு அரங்குகள், அரண்மனை காவலர் அலுவலகங்கள், வழிப்பாட்டுத் தளங்கள், அரங்குகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள், இசுலாமிய அரங்குகள், சுல்தானின் பிரதான குடியிருப்பு மற்றும் உள்துறை அலங்கார வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டிடக்கலை
தொகுசியார்கியா அரண்மனை பாரம்பரிய திராங்கானு கட்டிடக்கலை மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது. ஸ்பெயின், அண்டலூசியா (Andalusia) எனும் இடத்தில் உள்ள அல்ஹம்ப்ரா (Alhambra) வரலாற்று கட்டிடத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது.[2]
சிறப்புக்கூறுகள்
தொகு- 9 மீட்டர் நீளம் வரை 5,000 தனித்துவமான ஓவியங்கள்.
- 100 க்கும் மேற்பட்ட அறைகள்; ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு வடிவமைப்புகள்.
- 14 டன் வெண்கலக் கதவுகள்.
- மூன்று மாடி மண்டபம்.
- 865 ஏக்கர் நிலம் காடுகளால் சூழப்பட்டுள்ளது.
- 1,200 பேர் அமரும் மண்டபம்.
- 1,800 பேர் உணவருந்தும் கூடம்.
- தோட்டத்தில் நீரூற்றுகள் மற்றும் கோபுரங்கள்.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Official Portal Office of His Royal Highness The Sultan Of Terengganu". isttrg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 December 2022.
- ↑ Buzz, World of (June 3, 2015). "Malaysia's Newest Palace in Terengganu Will Make Your Jaw Drop". World of Buzz.
- ↑ "Royal Istana Palace - Bensley". www.bensley.com.