இ. சுந்தரமூர்த்தி

இ. சுந்தரமூர்த்தி என்பவர் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார்.

இ. சுந்தரமூர்த்தி

பிறப்பு

தொகு

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூரில் 1942இல் பிறந்தார். [1]

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில் தலைவர், பதிப்புத்துறைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். டிசம்பர் 19 2001 முதல் டிசம்பர் 18 2004 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். செம்மொழி நிறுவனத்தில் 2008 முதல் 2014 வரை முதுநிலை ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். இந்நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். [1] [2]

நூல்கள், கட்டுரைகள்

தொகு

சுவடியியல், பதிப்பியல், இலக்கணம், நடையியல் எனப் பல துறைகளில் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். [1] 260 கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழக அரசின் திருக்குறள் விருது[சான்று தேவை] உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். [3]

பயணங்கள்

தொகு

தமிழாய்வுப் பணிகளுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளார். [1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._சுந்தரமூர்த்தி&oldid=3702640" இலிருந்து மீள்விக்கப்பட்டது