இ. மகாதேவா
தேவன் - யாழ்ப்பாணம் (செப்டம்பர் 27, 1924 - திசம்பர் 8, 1982) என்ற பெயரில் எழுதி வந்த இளையப்பா மகாதேவா ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளரும், ஆசிரியரும் ஆவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியரான இவர் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், அறிவியல் புதினங்கள், கட்டுரைகள் எனப் பலதும் எழுதி வந்தவர்.
தேவன் - யாழ்ப்பாணம் | |
---|---|
பிறப்பு | இளையப்பா மகாதேவா 27 செப்டம்பர் 1924 யாழ்ப்பாணம் |
இறப்பு | திசம்பர் 8, 1982 யாழ்ப்பாணம் | (அகவை 58)
இருப்பிடம் | நாவலர் வீதி, யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | ஆசிரியர் |
பணியகம் | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி |
அறியப்படுவது | எழுத்தாளர், பேச்சாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | பரமேசுவரி (இ. 31 மார்ச் 2018) |
பிள்ளைகள் | 5 |
இளமைக் காலமும், பணியும்
தொகுதேவன் யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் வாழ்ந்து வந்தவர். இலண்டன் மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தியடைந்த தேவன் தனது 19வது அகவையில் உடுவில் மான்ஸ் பாடசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.[1] பின்னர் மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று, உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பயிற்சியை முடித்த பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.[1] மனைவியின் பெயர் பரமேசுவரி, இசை ஆசிரியையாகப் பணியாற்றியவர். இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண் பிள்ளைகள்.[1] தேவன் தனது 58வது அகவையில் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[1]
எழுத்துலகில்
தொகுதேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.[2] ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை வைத்து கேட்டதும், நடந்ததும் என்ற புதினத்தை எழுதினார்.[1] தமிழகத்தின் சுதர்சன் வெளியீட்டாளர்கள் இவரின் வாடிய மலர்கள் என்ற புதின நூலை வெளியிட்டார்கள்.[1] காந்தியக் கதைகள்" என்ற தொகுதியிலும் (1969) இவரின் சிறுகதைகள் இடம்பெற்றன.[2] யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.[3] அக்காலத்தில் ஆனந்த விகடன் இதழின் ஆசிரியராக இருந்த நகைச்சுவை எழுத்தாளர் தேவனிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.[2] டிரசர் ஐலண்டு என்னும் பிரபல ஆங்கிலப் புதினத்தை "மணிபல்லவம்" என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூல் அக்காலத்தில் உயர்தர வகுப்புப் பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டது.[2][3]
மொழிபெயர்ப்பாளர்
தொகுஆங்கிலப் பேச்சாளர்களின் உரைகளை சமகாலத்தில் தமிழில் மொழிபெயர்ப்பதில் வல்லவராக இருந்தார் தேவன். ஜெயபிரகாஷ் நாராயண் யாழ்ப்பாணம் வந்தபோது அவரது பேச்சை தமிழில் மொழிபெயர்த்துப் பாராட்டைப் பெற்றார்.[1] பிரதமர் டட்லி சேனநாயக்காவின் யாழ்ப்பாணப் பயணங்களில் அவரின் பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.[1]
எழுதிய நாடகங்கள்
தொகு- தென்னவன் பிரமராயன்
- விதி
- இரு சகோதரர்கள்
- பத்தினியா பாவையா
- வீரபத்தினி\
- நளதமயந்தி
புதினங்கள்
தொகு- வாடிய மலர்கள்,
- மணிபல்லவம்,
- கேட்டதும் நடந்ததும் (1956, 1965)
- அவன் சுற்றவாளி (குறும் புதினம், 1968)
சிறுகதைத் தொகுதிகள்
தொகு- தேவன் – யாழ்ப்பாணம் சிறுகதைகள்
கட்டுரை நூல்கள்
தொகு- வானவெளியில் (அறிவியல் கட்டுரைகள், 1958)
மறைவு
தொகுஇ. மகாதேவா 1982 திசம்பர் 8 புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் தனது 58-வது அகவையில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "யாழ் இந்துவில் முத்தாகத் திகழ்ந்த மாணவர்கள் ஹீரோ தேவன் மாஸ்டர்!". ஈழநாடு. 26-09-1982. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1982.09.26. பார்த்த நாள்: 23-03-2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 எழுத்தாளர் மகாதேவா பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம், Ourjaffna
- ↑ 3.0 3.1 தேவன் - யாழ்ப்பாணம்! பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம், வ. ந. கிரிதரன், பதிவுகள்
- ↑ "தேவன் காலமானார்". ஈழநாடு. 09-12-1982. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1982.12.09. பார்த்த நாள்: 7-12-2020.