ஈகோஸ்ப்பொட்டாமி

துருக்கி ஆறு

ஈகோஸ்ப்பொட்டாமி (Aegospotami, பண்டைக் கிரேக்கம்Αἰγὸς Ποταμοί , Aigos Potamoi, அல்லது Aegospotamos (அதாவது ஆட்டு ஒடை ) என்பது செஸ்டோசின் வடகிழக்கில் ஹெலஸ்பாண்டில் (நவீன துருக்கியம் Çanakkale Boğazı ) பாய்ந்து செல்லும் ஒரு சிறிய ஆற்றின் பண்டைய கிரேக்க பெயராகும். [1]

இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் கிமு 405 இல் தீர்க்கமான ஈகோஸ்ப்பொட்டாமி சமர் நடந்தது. இதில் லைசாந்தர் ஏதெனியன் கடற்படையை அழித்தார். அதன் வழியாக பெலோபொன்னேசியப் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். [2] கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டு நாணயங்களால் அச்சிடப்பட்ட இதே பெயரில் அமைந்து உள்ள பண்டைய கிரேக்க நகரம், செர்சோனீஸில் உள்ள பண்டைய திரேசில் இந்த ஆறு அமைந்துள்ளது.

467 இல் மூத்த பிளினி மற்றும் அரிசுட்டாட்டில் உள்ளிட்டவர்களின் பண்டைய ஆதாரங்களின்படி கிமு 467 இல் ஒரு பெரிய விண்கல் ஈகோஸ்ப்பொட்டாமிக்கு அருகில் விழுந்தது. இது பழுப்பு நிறமாகவும், ஒரு சுமை வண்டி அளவு கொண்டதாகவும் விவரிக்கப்பட்டது. விண்கல் விழுந்த நேரத்தில் ஒரு வால் நட்சத்திரம் காணப்பட்டது. அது ஹாலியின் வால் நட்சத்திரம் என தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டது. இது ஹாலியின் வால் நட்சத்திரத்தின் முதல் ஐரோப்பிய பதிவாக இருக்கலாம். [3] [4]

ஈகோஸ்ப்பொட்டாமி நவீன துருக்கிய நகரமான Sütlüce, Gelibolu வின் வடகிழக்கில் தார்தனெல்சுவில் அமைந்துள்ளது. [5]

குறிப்புகள் தொகு

  1. John Freely -The companion guide to Turkey 1993 "... a stream known to the Greeks as Aegospotami, or Goats' River, which empties into the strait at Ince Limam, ..."
  2. Donald Kagan, The Fall of the Athenian Empire, (Cornell University Press, 1991), p.386. "A key to understanding the course of events is that Aegospotami was only a beach, a place without a proper harbor, a little to the east of the modern Turkish town called Sütlüce, or Galata in its Greek form, the ancient town of ..."
  3. Donald K. Yeomans (1991). Comets: A Chronological History of Observation, Science, Myth and Folklore. Donald Wiley and Sons. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-61011-3. https://archive.org/details/cometschronologi0000yeom. 
  4. "Halley's comet 'was spotted by the ancient Greeks'". BBC. https://www.bbc.co.uk/news/science-environment-11255168. 
  5. Kagan, Donald (1991). The Fall of the Athenian Empire. Cornell University Press. பக். 386–388. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8014-9984-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈகோஸ்ப்பொட்டாமி&oldid=3440826" இலிருந்து மீள்விக்கப்பட்டது