ஐசாக் கலாத்னிகோவ்
ஐசாக் மார்க்கோவிச் கலாத்னிகோவ் (Isaak Markovich Khalatnikov, உருசியம்: Исаак Маркович Халатников; பிறப்பு: 17 அக்தோபர் 1919) ஒரு சோவியத் இயற்பியலாளர் ஆவார். இவர் பொது சார்பியல் கோட்பாட்டில் BKL கருதுகோள் உருவாக்கியதற்காகப் பெயர் பெற்றார்.
ஐசாக் கலாத்னிகோவ் | |
---|---|
பிறப்பு | 17 அக்டோபர் 1919 நிப்ரோ நகரம் |
இறப்பு | 9 சனவரி 2021 (அகவை 101) Chernogolovka |
படித்த இடங்கள் | Oles Honchar Dnipro National University, மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
பணி | இயற்பியலறிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
விருதுகள் | ஸ்டாலின் பரிசு, Marcel Grossmann Award, Foreign Member of the Royal Society |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | Acting, இயற்பியல், கோட்பாட்டு இயற்பியல் |
நிறுவனங்கள் |
|
ஆய்வு நெறியாளர் | லேவ் லந்தாவு |
வாழ்வும் பணியும்
தொகுஇவர் யூதக் குடும்பத்தில் தினிப்ரோபெத்ரோவ்சுக் எனுமிடத்தில் பிறந்தார். இவர் தினிப்ரோபெத்ரோவ்சுக் அரசு பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று 1941 இல் இயற்பியலில் பட்டம் பெற்றார். இவர் 1944 இல் இருந்து சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக்கைருந்துள்ளார். இவர் 1952 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவரது மனைவியான வாலன்டினா புரட்சியாளர்நிகோலாய் சுக்கோர்சுவின் மகளாவார். மீப்பாய்மைக்கான இலாந்தவு-கலாத்னிகோவ் கோட்பாடு உட்பட, இவரது பெரும்பாலான ஆய்வுப்பணிகள் இலாந்தவோடு இணைந்தோ அல்லது பின்னவரின் ஆர்வம் தூண்டிய ஊக்கத்தோடோயே மேற்கொள்ளப்பட்டன.
இவர் 1970 இல் பிரின்சுடன் பல்கலைக்கழக சார்லசு மைசுனர் அறிமுகப்படுத்திய மிக்சுமாசுட்டர் அண்டப்படிமத்தால் ஈர்க்கப்பட்டு, விளாதிமிர் ஏ. பெலின்சுகி அவர்களுடனும் எவ்கேனி மீகயீலொவிச் இலிப்சிட்சுடனும் இணைந்து BKL கருதுகோள் எனும் கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தினார். இது செவ்வியல் ஈர்ப்புக் கோட்பாட்டில் உள்ள மிக உயர்ந்த திறந்தநிலைச் சிக்கல்களில் ஒன்றாக பரவலாக்க் கருதப்படுகிறது. இதில் B என்பது பெலின்சுகியையும் K என்பது கலாத்னிகோவையும் L என்பது இலிப்சிட்சையும் குறிக்கும்.
இவர் 1965 முதல் 1992 வரை மாஸ்கோவில் உள்ள இலாந்தவு கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தை நெறிபடுத்தினார். இவர் 1984 இல் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.இவர் இலாந்தவு பருசும் அலெக்சாந்தர் வான் அம்போல்ட் விருதும் பெற்றார். இலண்டன் அரசு கழக அயல்நாட்டு உறுப்பினராக உள்ளார்.
இவர் நிகோலொவால் அவர் பிடித்த அனைத்துக்குமான கோட்பாடு எனும் 2014 ஆம் ஆண்டுத் திரைப்படத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளார்.
தகைமைகளும் விருதுகளும்
தொகு- தந்தையர்நாட்டுத் தகைமை ஆணை, 3 ஆம் வகுப்பு
- அக்தோபர் புரட்சி ஆணை
- தேசப்பற்றுப் போர் ஆணை, 2 ஆம் வகுப்பு
- உழைப்புச் செம்பதாகை ஆணை, மும்முறை
- சுடாலின் பரிசு (1953)
- மார்சல் கிராசுமன் விருது (2012) " BKL வழுப்புள்ளி அல்லது தனிவழுப்புள்ளி எனப்படும் அண்டவியல் குழப்ப அலைதகவுப் பான்மை தனிமைப்புள்ளியுடன் அய்ன்சுட்டீன் சார்பியல் சமன்பாடுகளுக்கான பொதுத் தீர்வைக் கண்டுபிடித்ததற்காக"
மேற்கோள்கள்
தொகு- "Khalatnikov's C.V." பார்க்கப்பட்ட நாள் August 11, 2005.
- Belinskii, V.; Khalatnikov, I.; Lifschitz, E. (1970). "Oscillatory approach to a singular point in the relativistic cosmology". Adv. Phys. 19 (80): 525–573. doi:10.1080/00018737000101171. Bibcode: 1970AdPhy..19..525B.