நிப்ரோ நகரம்

நிப்ரோ (Dnipro) உக்ரைன் நாட்டின் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணத்தின் தலைநகராகும். மே 2016 வரை, உக்ரேனின் நான்காவது பெரிய நகரமாக இருந்தது. இங்கு சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். [1] [2] [3][4] இது உக்ரைனின் தென்-மத்திய பகுதியில் உக்ரேனிய தலைநகர் கீவ்யேவின் தென்கிழக்கில் ஓடுகின்ற தினேப்பர் ஆற்றின் கரையில் 391 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[5] நிப்ரோ பெத்ரோவ்சுகி மாகாணத்தின் நிர்வாக மையமாக உள்ளது. நிர்வாக ரீதியாக, இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும், நிப்ரோ நகராட்சியின் மையமாகவும், நிப்ரோ ரியானின் நிர்வாக மையமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 1,000,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.(2018 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ) .

இன்றைய நிப்ரோவின் பிரதேசத்தில் முதலில் உருவாக்கப்பட்ட நகரம் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்திருக்கலாம் என்று தொல்பொருள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. [6]

அரசுதொகு

நிப்ரோ நகரம் நிப்ரோ நகர சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இது ஒரு நகர நகராட்சி ஆகும். மேலும் இது ஒரு தனி மாவட்டமாகவும் உள்ளது. 8 நகர மாவட்டங்களில் 5 நகரங்கள் நவம்பர் 2015 இன் பிற்பகுதியில் மறுபெயரிடல் சட்டங்களுக்கு இணங்க மறுபெயரிடப்பட்டன .

நிலவியல்தொகு

இந்த நகரம் முக்கியமாக தினேப்பர் ஆற்றின் இரு கரைகளிலும், சமாரா நதியுடன் சங்கமத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நிப்ரோ ஒரு முக்கிய குறிக்கோள் இன்றி அலைந்து திரிந்து இறுதியில் கெரசானைக் கடந்து, இறுதியாக கருங்கடலில் கலக்கிறது. இதன் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் பல தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. நகரின் தென்கிழக்கில் சுமார் 15 கி. மீ தூரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது.

காலநிலைதொகு

கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாடு முறையின் கீழ், நிப்ரோ ஒரு ஈரப்பதமான கண்ட காலநிலையை கொண்டுள்ளது, இருப்பினும் இது மத்தியதரைக் கடலில் செல்வாக்கு செலுத்தும் வெப்ப-கோடை ஈரப்பதமான கண்ட காலநிலையை கொண்டுள்ளது. ஏனெனில் கோடை காலம் மற்ற மாதங்களை விட வறண்டதாக இருக்கும். நகரத்தின் நிலப்பக்திகளை விட மலைகளில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது.[7]

நகரமைப்புதொகு

நிப்ரோ முதன்மையாக ஒரு இலட்சம் மக்கள் வசிக்கும் தொழில்துறை நகரம்; கடந்த சில நூற்றாண்டுகளில் இது ஒரு பெரிய நகர மையமாக வளர்ந்துள்ளது, இன்று உக்ரைனின் நான்காவது பெரிய நகரமாக மாறியுள்ளது.

மக்கள் தொகைதொகு

நகரத்தில் சுமார் 1 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில், நகரத்தின் மக்கள் தொகையின் சராசரி வயது 40 ஆண்டுகள் ஆகும். ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட சற்றே குறைந்துள்ளது. நிப்ரோவில் இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி பொதுவாக உக்ரைனின் வளர்ச்சியை விட சற்றே அதிகம்.

2017 சூன்-சூலை இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 63% குடியிருப்பாளர்கள் தாங்கள் வீட்டில் உருசிய மொழி பேசுவதாகவும், 9% உக்ரேனிய மொழியையும், 25% உக்ரேனிய மற்றும் உருசிய மொழியையும் சமமாகப் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது.[8]

பொருளாதாரம்தொகு

நிப்ரோ உக்ரைனின் முக்கிய தொழில்துறை மையமாகும். வார்ப்பிரும்பு, ஏவுதள வாகனங்கள், உருட்டப்பட்ட உலோகம், குழாய்கள், இயந்திரங்கள், வெவ்வேறு சுரங்க இணைப்புகள், விவசாய உபகரணங்கள், உழவு இயந்திரங்கள், தள்ளுவண்டிகள், குளிர்சாதன பெட்டிகள், வெவ்வேறு இரசாயனங்கள் மற்றும் பல தயாரிப்புகளை உள்ளடக்கிய கனரக பல தொழிற்சாலைகள் உள்ளன. பெத்ரோவ்சுகியின் உலோக ஆலை மிகவும் பிரபலமான மற்றும் பழமையான ஒன்றாகும். (இது 19 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது). நகரத்தில் பெரிய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஒளி தொழில் தொழிற்சாலைகள் உள்ளன. பிரான்சு, கனடா, ஜெர்மனி மற்றும் [ஐக்கிய இராச்சியம்]] ஆகிய நாடுகளுக்கு தையல் மற்றும் ஆடைகள் ஏற்றுமதி செய்கின்றன். நிப்ரோ 1950களில் இருந்து விண்வெளித் தொழிலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. [9]

இதனையும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. http://www.dneprstat.gov.ua/statinfo/ds/2011/ds1_m07.htm%7Cwebsite=Department[தொடர்பிழந்த இணைப்பு] of Statistics in Dnipropetrovsk Oblast|language=uk|script-title=uk:Чисельність населення на 1 липня 2011 року, та середня за січень–червень 2011 року|trans-title=Population as of 1 July 2011, and the average for January – June 2011|archive-url=https://web.archive.org/web/20131020090115/http://www.dneprstat.gov.ua/statinfo/ds/2011/ds1_m07.htm%7Carchive-date%3D20 October 2013
  2. https://gorod.dp.ua/inf/region/?pageid=94%7Cwebsite=gorod.dp.ua%7Clanguage=ru%7Cscript-title=ru:Общие сведения и статистика|trans-title=General information and statistics|access-date=27 July 2019}}
  3. Ukrcensus.gov.ua — City பரணிடப்பட்டது 9 சனவரி 2006 at the வந்தவழி இயந்திரம் URL accessed on 8 March 2007
  4. "Official statistics, 01.08.2012 (Ukrainian)". Dneprstat.gov.ua. 25 October 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Coordinates + Total Distance". MapCrow. 16 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. Oleh Repan. The origins of Dnipro, the city and its name பரணிடப்பட்டது 2022-03-15 at the வந்தவழி இயந்திரம். The Ukrainian Week. July 2017 (page 46)
  7. Rivas-Martínez, Salvador (2004). "Bioclimatic & Biogeographic Maps of Europe". University of León. 17 மே 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Public Opinion Survey of Residents of Ukraine June 9 – July 7, 2017" (PDF). iri.org. 22 August 2017. p. 80. 22 August 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
  9. "Firefly looks to bolster aerospace ties with US, investing in Ukraine for the long-haul | KyivPost – Ukraine's Global Voice". KyivPost. 2018-08-20. 2019-04-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிப்ரோ_நகரம்&oldid=3560704" இருந்து மீள்விக்கப்பட்டது