ஈடன் லேண்டிங் சூழலியல் காப்பகம்
ஈடன் லேண்டிங் சூழலியல் காப்பகம் (Eden Landing Ecological Reserve) என்பது ஒரு இயற்கை வளக்காப்பகம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் கிழக்குக் கரையில், ஹேவர்ட் மற்றும் யூனியன் சிட்டி நகரங்களுக்கு அருகில் அமைந்திருக்கிறது. கலிபோர்னியாவின் மீன் மற்றும் வேட்டைத் துறையால் இந்தக் காப்பகம் நிர்வகிக்கப்படுகிறது. 5,040 ஏக்கர் பரப்பளவு கொண்ட முன்னாள் தொழில்முறை உப்புக் குளங்கள், தற்போது குறைந்த உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்வாழ் பறவைகள் வாழ்விடமாக பயன்படுத்தப்படுகின்றது.[1][2]
ஈடன் லேண்டிங் சூழலியல் காப்பகம் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் | |
அமைவிடம் | சான் பிரான்சிஸ்கோ விரிகுடா, கலிபோர்னியா |
ஆள்கூறுகள் | 37°35′53.7208″N 122°06′07.3056″W / 37.598255778°N 122.102029333°W |
நிருவாக அமைப்பு | கலிபோர்னியா மீன் மற்றும் வேட்டைத் துறை |
பின்னணி
தொகுஇந்த காப்பகத்தின் வடக்கே ஹேவர்ட் பிராந்தியக் கரைப்பகுதி என்னும் பாதுகாக்கப்பட்ட பிராந்திய பூங்காவும், தெற்கே அலமேடா சிறுகுடா பிராந்தியத் தடமும் உள்ளது. டான் எட்வார்ட்ஸ் தேசிய காட்டுயிர் சரணாலயம், கொயோட்டே ஹில்ஸ் பிராந்தியப் பூங்கா ஆகியவை இக்காப்பகத்தின் அருகே தெற்கில் உள்ளது. வடக்குப் பகுதியில் சேன் மத்தேயோ - ஹேவர்ட் பாலமும், ஹேவர்ட் கரைப்பகுதி விளக்க மையமும் உள்ளது.[3] அவ்வப்போது சில நீர்ப்பறவை வேட்டை இங்கு அனுமதிக்கப்படுகிறது.[1] ஆலிவர் உப்பு நிறுவனத்தின் சிதைவெச்சங்கள் இந்தக் காப்பகத்தினுள் உள்ளது.
தெற்கு விரிகுடா உப்புக் குளங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியான இது, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேற்கு கரையோரத்தில் உள்ள மிகப்பெரிய உப்புக் குள மறுசீரமைப்பு திட்டம் ஆகும்.[4] பிப்ரவரி 2023 வரை 3,040 ஏக்கர் உப்புக் குளங்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளன.[5] பல முன்னாள் உப்புக் குளங்கள் காட்டுயிர்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொது மக்களுக்கு புதிய பாதைகள் மற்றும் படகுத்துறை ஆகியவை திறக்கப்பட்டன. விரிகுடா பகுதி சுற்றுச்சூழல் அமைப்பான "சேவ் தி பே" (Save the Bay), உவர்ச் சதுப்புநிலத்தின் விளிம்புகளில் அப்பகுதிக்கான நாட்டுத் தாவரங்களை வளர்ப்பதற்கான பணிகளைச் செய்கிறது.
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 "2010/2011 ஈடன் லேண்டிங்கில் நீர்ப்பறவைகளை வேட்டையாடும் வாய்ப்புகள்" (PDF). CA Department of Fish and Game. Archived from the original (PDF) on 2011-09-01. பார்க்கப்பட்ட நாள் 2011-08-29.
- ↑ "ஈடன் லேண்டிங் சூழலியல் காப்பகம் - பே நேச்சர்". Baynature.org. 2013-01-22. Archived from the original on 2012-06-15. பார்க்கப்பட்ட நாள் 2013-08-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-11-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-20.
- ↑ "South Bay Restoration-Home". Southbayrestoration.org. Archived from the original on 2013-06-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-08.
- ↑ "பிப்ரவரி 2023 நிலவரம்". Southbayrestoration.org. Archived from the original on 2 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Eden Landing Ecological Reserve at the California Department of Fish and Game (CDFG) website பரணிடப்பட்டது 2017-05-31 at the வந்தவழி இயந்திரம் (minimal content as of 08/2011)
- Eden Landing Ecological Reserve at Bay Nature website
- Eden Landing Salt Pond Restoration Project website
- South Bay Salt Ponds Restoration Project website
- Eden Landing Ecological Reserve and the South Bay Salt Ponds Restoration Project: A View of the Alameda Creek Watershed from Its Intersection with the SF Bay, John Krause, CDFG, 2008 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்