ஈப்போ ஒயிட் காபி
மலேசியா, பேராக், ஈப்போவில் தோன்றிய ஒரு பிரபலமான காபி பானம்.
ஈப்போ ஒயிட் காபி அல்லது ஈப்போ வெள்ளை காபி (ஆங்கிலம்: Ipoh White Coffee மலாய்: Kopi Putih Ipoh சீனம்: 白咖啡) என்பது மலேசியா, பேராக், ஈப்போவில் தோன்றிய ஒரு பிரபலமான காபி பானமாகும்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஓல்ட் டவுன் கோபிதியாம் கடையில் ஒரு கோப்பை ஈப்போ வெள்ளை காபி | |
தொடங்கிய இடம் | ஈப்போ, மலேசியா |
---|---|
பகுதி | தென்கிழக்காசியா |
தொடர்புடைய சமையல் வகைகள் | மலேசிய உணவுகள் |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக அல்லது குளிராக |
முக்கிய சேர்பொருட்கள் | காபி தூள், அடர்பால் |
காபி கொட்டைகள் செம்பனை எண்ணெயில் (Palm Oil Margarine) வறுக்கப் படுகின்றன; அதன் விளைவாக வரும் கறுமைக் காபி அடர்பாலுடன் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகிறது.[1]
வெள்ளை காபி (White Coffee) என்ற சொல் அதன் சீனப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பில் இருந்து உருவானது. 19-ஆம் நூற்றாண்டில், மலாயாவின் உள்ளூர் ஈயச் சுரங்கங்களில் வேலை செய்ய வந்த சீனக் குடியேறிகளால் இந்த ஈப்போ வெள்ளை காபி அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
சான்றுகள்
தொகு- ↑ Simon Richmond (2007). Malaysia, Singapore & Brunei. Ediz. Inglese. Lonely Planet. pp. 148–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-708-1.
- ↑ Avran, Dave (September 10, 2019). "Intriguing and interesting inception of Ipoh White Coffee". Free Malaysia Today News. https://www.freemalaysiatoday.com/category/leisure/2019/09/10/intriguing-and-interesting-inception-of-ipoh-white-coffee/.