ஈமு (ஆய்விதழ்)
ஈமு (Emu-journal), ஆசுட்ரல் பறவையியல் என்ற துணைத்தலைப்புடன் வெளிவருவது, ஆத்திரேலிய பறவை வாழ்க்கையின் (பேர்ட்லைப் ஆஸ்திரேலியா)(முன்னர் அரச ஆத்திரேலிய பறவையியல் வல்லுநர்கள் ஒன்றியம்) சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும். இந்த ஆய்விதழ் 1901-ல் நிறுவப்பட்டது. ஆத்திரேலியாவில் வெளியிடப்படும் பழமையான பறவையியல் ஆய்விதழ் இதுவாகும்.[2] இதன் தற்போதைய தலைமை தொகுப்பாசிரியர் கேட் புக்கானன் (டீக்கின் பல்கலைக்கழகம்). 2016ஆம் ஆண்டு வரை பொதுநலவாய அறிவியல் தொழிலக ஆராய்ச்சி நிறுவன வெளியீடாக அரச அத்திரேலியா பறவையியல் வல்லுநர்கள் ஒன்றியத்திற்காகக் காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ஆய்விதழாக வெளியிடப்பட்டது. ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழின் 2021ஆம் ஆண்டு தாக்கக் காரணி 1.438ஐக் கொண்டுள்ளது. இது "பறவையியல்" பிரிவில் உள்ள 22 இதழ்களில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஈமு | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | ஈமு |
துறை | பறவையியல் |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | டெய்லர் & பிரான்சிசு, ஆத்திரேலிய பறவை வாழ்க்கைக்காக (ஆத்திரேலியா) |
வரலாறு | 1901-முதல் |
வெளியீட்டு இடைவெளி: | காலாண்டு |
தாக்க காரணி | 1.438 [1] (2021) |
குறியிடல் | |
ISSN | 0158-4197 (அச்சு) 1448-5540 (இணையம்) |
OCLC | 1567848 |
இணைப்புகள் | |