ஈயம்(II) ஆக்சலேட்டு

ஈயம்(II) ஆக்சலேட்டு (Lead(II) oxalate) என்பது PbC2O4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் வெண் திண்மமாக இயற்கையில் ஈயம்(II) ஆக்சலேட்டு தோன்றுகிறது [1].

ஈயம்(II) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
814-93-7
ChemSpider 55161
EC number 212-413-5
InChI
  • InChI=1S/C2H2O4.Pb/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 197481
  • C(=O)(C(=O)[O-])[O-].[Pb+2]
UN number 2291
பண்புகள்
PbC2O4
வாய்ப்பாட்டு எடை 295.219
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 5.28 கி/செ.மீ3
உருகுநிலை 327.4 °C (621.3 °F; 600.5 K)
கொதிநிலை 1,740 °C (3,160 °F; 2,010 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வர்த்தக முறையிலும் ஈயம்(II) ஆக்சலேட்டு கிடைக்கிறது. ஈயம்(II) நைட்ரேட்டும் சோடியம் ஆக்சலேட்டு இரண்டும் தலைகீழாக்க வினையின் மூலமாக சேர்ந்து ஈயம்(II) ஆக்சலேட்டு உருவாக்கப்படுகிறது :[2]

Pb2+( நீர்மம்) + C2O42− → PbC2O4 (திண்மம்).

கரைதிறன்

தொகு

ஈயம்(II) ஆக்சலேட்டு தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. அதிகமான அளவு ஆக்சலேட்டு எதிர்மின் அயனிகள் சேர்க்கப்பட்டால் கரைதிறன் உயர்கிறது. ஏனெனில் Pb(C2O4)22−அணைவு அயனி உருவாவதே காரணமாகும் [3].

மேற்கோள்கள்

தொகு
  1. "Lead Oxalate". American Elements: The World's Manufacturer of Engineered & Advanced Materials. http://www.americanelements.com/pboxl.html.
  2. Grases, F.; Ruiz, J.; Costa-Bauzá, A. (1993). "Studies on Lead Oxalate Crystalline Growth". Journal of Colloid and Interface Science 155 (2): 265–270. doi:10.1006/jcis.1993.1035. 
  3. Kolthoff, I.M.; Perlich, R. W.; Weiblen, D. (1942). "The Solubility of lead Sulfate and of Lead Oxalate in Various Media". Journal of Physical Chemistry 46 (5): 561. doi:10.1021/j150419a004. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயம்(II)_ஆக்சலேட்டு&oldid=4168941" இலிருந்து மீள்விக்கப்பட்டது