ஈயம்(II) பாசுபேட்டு
ஈயம்(II) பாசுபேட்டு (Lead(II) phosphate) Pb3(PO4)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும் . அயனிச்சேர்மமான ஈயம்(II) பாசுபேட்டு நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கக்கூடிய தானியக்க நடுநிலை வினைப்பொருளாகும் [1]. மனிதர்களிடம் குறைவாகவே சோதிக்கப்பட்டிருந்தாலும் இது விலங்குகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஈயம்(II) பாசுபேட்டு ஒரு புற்றுநோயூக்கியாகச் செயல்படுவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது [2]. ஈயம்(II) பாசுபேட்டு நிறமற்ற அல்லது வெண்மை நிறத்தில் அறுகோணப் படிகங்களாக காணப்படுகிறது. ஈயம்(II) பாசுபேட்டு தண்ணிரிலும் ஆல்ககாலிலும் கரைவதில்லை, ஆனால் நைட்ரிக் அமிலத்தில் கரைகிறது. மேலும் இச்சேர்மம் நிலையான சில ஐதராக்சைடுகளும் பெற்றுள்ளது. சூடுபடுத்தும்போது ஈயம்(II) பாசுபேட்டு, Pb மற்றும் POx.களைக் கொண்டுள்ள மிகவும் நச்சு வாயுக்களை வெளியிட்டு சிதைவடைகிறது [3]. ஈயம்(II) அசிட்டேட்டுடன் சோடியம் ஆர்த்தோபாசுபேட்டு சேர்த்து வினைப்படுத்தினால் ஈயம்(II) பாசுபேட்டு தயாரிக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
ஈயம்(II) பாசுபேட்டு | |
இனங்காட்டிகள் | |
7446-27-7 | |
பப்கெம் | 24009 |
பண்புகள் | |
Pb3(PO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 811.54272 கி/மோல் |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 6.9 g/cm3 |
உருகுநிலை | 1,014 °C (1,857 °F; 1,287 K) |
0.000014 கி/100 மி.லி | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையாது நைட்ரிக் அமிலத்தில் கரையும் |
−182.0·10−6 cm3/mol | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.048 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lead(II) phosphate". The Chemical Thesaurus. பார்க்கப்பட்ட நாள் 11 October 2010.
- ↑ Wright, John, (2003). Environmental Chemistry pg 211. New York (NY): Routledge.
- ↑ Lewis, Richard J., Lewis, Richard J. Sr., (2008). Hazardous chemicals desk reference (sixth ed.) pg 831. Hoboken (NJ): John Wiley & Sons, Inc.