ஈரமினோபிரிமிடின்கள்

ஈரமினோபிரிமிடின்கள் (Diaminopyrimidines) என்பவை C4H6N4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மங்களாகும். ஒரு பிரிமிடின் வளையத்துடன் இரண்டு அமீன் தொகுதிகள் இச்சேர்மத்தின் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

இக்லபிரிம்
மும்மெத்தோபிரிம்

பிரிமெத்தமீன், டிரைமெட்ரெக்சேட்டு மற்றும் பிரிட்ரெக்சிம்[1] போன்ற பல ஈரைதரோபோலேட்டு ரிடக்டேசு வளர்தடுப்பு மருந்துகள், ஈரமினோபிரிமிடின்கள் வகையைச் சேர்ந்தவையாகும். நுண்ணுயிர் எதிர்ப்பிகளான இக்லபிரிம் மற்றும் மும்மெத்திரிம் மருந்துகளும் இவ்வகையைச் சேர்ந்தவைகளேயாகும்.

இவ்வகை மருந்துகளில் சில புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என்ற தலைப்பில் காப்புரிமை பெற்றுள்ளன[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://aac.asm.org/cgi/content/full/45/12/3293 பரணிடப்பட்டது 2008-08-29 at the வந்தவழி இயந்திரம் "Dicyclic and Tricyclic Diaminopyrimidine Derivatives as Potent Inhibitors of Cryptosporidium parvum Dihydrofolate Reductase: Structure-Activity and Structure-Selectivity Correlations" Nelson et al. 2001
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரமினோபிரிமிடின்கள்&oldid=3593621" இலிருந்து மீள்விக்கப்பட்டது