ஈரயோடோ அசிட்டிலீன்

வேதிச் சேர்மம்

ஈரயோடோ அசிட்டிலீன் (Diiodoacetylene) என்பது C2I2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு கரிம அயோடின் வகை சேர்மமான இது வெள்ளை நிறத்தில் ஆவியாகும் திடப்பொருளாகக் காணப்படுகிறது. கரிம கரைப்பான்களில் கரைகிறது. மும்மெத்தில்சிலைல் அசிட்டிலீனை அயோடினேற்றம் செய்து ஈரயோடோ அசிட்டிலீனை தயாரிக்கலாம்.[1]

ஈரயோடோ அசிட்டிலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈரயோடோ அசிட்டிலீன், டை அயோடோ அசிட்டிலீன்
இனங்காட்டிகள்
624-74-8
ChemSpider 55116
InChI
  • InChI=1S/C2I2/c3-1-2-4
    Key: XANKMCMFEJCODV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61170
  • C(#CI)I
பண்புகள்
C2I2
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 3.43 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாதிரிகள் 80 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெடிக்கும் தன்மை கொண்டிருந்தாலும், ஈரயோடோ அசிட்டிலீன்களில் ஈரயோடோ அசிட்டிலீன் மட்டும் மிக எளிதாக கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இருகுளோரோ அசிட்டிலீன் அதிகமாக ஆவியாகும் மற்றும் அதிக வெடிக்கும் தன்மை கொண்டது.[2]

ஈரயோடோ அசிட்டிலீன் ஒரு நேரியல் சேர்மம் என்று எக்சு கதிர் படிகவியல் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[3] இருப்பினும் இது அதிர்ச்சி, வெப்பம் மற்றும் உராய்வு உணர்திறன் கொண்ட ஒரு சேர்மமாகும். மற்ற ஆலோ ஆல்க்கைன்களைப் போலவே, ஈரயோடோ அசிட்டிலீனும் ஒரு வலுவான ஆலசன் பிணைப்பு நன்கொடையாளராகச் செயல்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Perkins, Catherine; Libri, Stefano; Adams, Harry; Brammer, Lee (2012). "Diiodoacetylene: Compact, Strong Ditopic Halogen Bond Donor". CrystEngComm 14 (9): 3033. doi:10.1039/c2ce00029f. 
  2. Henning Hopf; Bernhard Witulski (1995). "Functionalized Acetylenes in Organic Synthesis ‐ The Case of the 1‐Cyano‐ and the 1‐Halogenoacetylenes". In Stang, Peter J.; Diederich, François (eds.). Modern Acetylene Chemistry. Weinheim: VCH. pp. 33–66. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9783527615278.ch02. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527615261.
  3. Dunitz, J. D.; Gehrer, H.; Britton, D. (1972). "The Crystal Structure of Diiodacetylene: An Example of Pseudosymmetry". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 28 (7): 1989–1994. doi:10.1107/S0567740872005400. .
  4. Cavallo, G.; Metrangolo, P.; Milani, R.; Pilati, T.; Priimagi, A.; Resnati, G.; Terraneo, G. (2016). "The Halogen Bond". Chem. Rev. 116 (4): 2478–2601. doi:10.1021/acs.chemrev.5b00484. பப்மெட்:26812185. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரயோடோ_அசிட்டிலீன்&oldid=4053092" இலிருந்து மீள்விக்கப்பட்டது