ஈவோ யொசிப்போவிச்
ஈவோ யொசிப்போவிச் (Ivo Josipović, பிறப்பு: ஆகஸ்ட் 28, 1957) என்பவர் குரோவாசியாவின் அரசியல்வாதியும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், வழக்கறிஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஜனவரி 2010 இல் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. குரோவாசியாவின் நாடாளுமன்றத்தில் சமூக மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
ஈவோ யொசிப்போவிச் Ivo Josipović | |
---|---|
குரோவாசியாவின் அரசுத் தலைவர் | |
பதவியில் 18 பெப்ரவரி 2010 | |
பிரதமர் | யாத்ரான்கா கோசொர் |
Succeeding | ஸ்டெப்பான் மேசிச் |
குரோவாசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 டிசம்பர் 2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 ஆகத்து 1957 சாகிரேப், யுகோசுலாவியா |
அரசியல் கட்சி | சுயேட்சை (2010–இன்று) |
பிற அரசியல் தொடர்புகள் | குரோவாசியக் கம்யூனிஸ்டுகளின் முன்னணி (1990 இற்கு முன்னர்) குரோவாசிய சமூக மக்களாட்சிக் கட்சி (1990–2010) |
துணைவர் | தத்தியானா ஜொசிப்போவிச் |
முன்னாள் கல்லூரி | சாகிரேப் பல்கலைக்கழகம் |
தொழில் | பேராசிரியர் வழக்கறிஞர் இசைக்கலைஞர் |
இணையத்தளம் | Official website |
27 டிசம்பர் 2009 அரசுத் தலைவர் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனையடுத்து 2010, ஜனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற மறுவாக்குப்பதிவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Social Democrat Ivo Josipovic elected Croatia president, பிபிசி, 11 சனவரி 2010