ஈ. இராஜா

இந்திய அரசியல்வாதி

ஈ. இராஜா (E. Raja) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 16ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் வி. எம். இராஜலட்சுமியை தோற்கடித்தார்.[1] 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (தமிழ்நாடு) அமைச்சராக இராஜலட்சுமி பணியாற்றியுள்ளார். இந்தத் தொகுதியை திமுக 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியது.

ஈ. இராஜா
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மே 2021
தொகுதிசங்கரன்கோயில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசங்கரன்கோயில்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
கல்விமுதுகலை (பெரியார் பல்கலைக்கழகம்), சட்டம் (சேலம், மத்திய சட்டக் கல்லூரி)
தொழில்வழக்கறிஞர்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._இராஜா&oldid=3324031" இலிருந்து மீள்விக்கப்பட்டது