உக்குளாங்குளம் சிவன் கோவில்
உக்குளாங்குளம் சிவன் கோவில் (Ukkulankulam Sivan Kovil) இலங்கையின் வவுனியா மாவட்டத்தின் உக்குளாங்குளம் உபநகரில் அமையப்பெற்றுள்ள ஒரு சிவாலயமாகும். உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேசுவரர் சுவாமி தேவஸ்தானம் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. இலங்கைத் திருநாட்டின் வன்னிமாநகரின் தலைநகர் என அழைக்கப்படும் வவுனியா மாவட்டத்திலிருந்து சுமார் 3.9 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 2000ஆம் ஆண்டுகளின் பின்னர் அமைக்கப்பெற்ற இந்த சிவாலயமானது, ஆரம்பத்தில் சிறு கொட்டிலில் வீடு போன்ற அமைப்பில் காணப்பட்டது. 2018 தொடக்கம் 2020 வரை திருப்பணிகள் இடம்பெற்று 2020இல் குடமுழுக்கு நடைபெற்று, இன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள கோவில்குளம் சிவன் கோவிலுக்கு அடுத்த பிரபாலாமான கோவிலாக திகழ்கிறது.[1]
உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் | |
---|---|
ஆலயமுகப்பு கோபுரம் | |
ஆள்கூறுகள்: | 8°45′27″N 80°28′37″E / 8.7576249°N 80.4768776°E |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடக்கு மாகாணம் |
மாவட்டம்: | வவுனியா |
அமைவு: | உக்குளாங்குளம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரேஸ்வரர் |
தாயார்: | மீனாட்சி அம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | அலங்கார உற்சவம் பிரதோஷம் கேதார கௌரி விரதம் |
உற்சவர்: | மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட பாணி |
கோயில்களின் எண்ணிக்கை: | 11 |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | தர்மகர்த்தா சபை |
இணையதளம்: | website |
அமைவிடம்
தொகுவவுனியா மாவட்டத்தின் பண்டாரிகுளம் கிராம எல்லையிலிருந்து 500மீ தொலைவில் உக்குளாங்குளம் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ள இக்கோவில் சுற்றிவர விநாயகர், அம்மன், முனீஸ்வரன் கோவில்களினால் சூழப்பெற்ற ஓரிடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
ஆலய சிறப்பம்சம்
தொகுஇந்த ஆலயமானது, இலங்கையிலே காணப்படும் ஒரே ஒரு பஞ்சமுக (5 முக) இலிங்கமாகும். இந்த அருவுருவத்திருமேனியானது சுமார் 5 1/2 அடி உயரமுடையது. இது அகன்ற ஆவுடை உடையது. இந்தத் திருக்கோவிலானது இந்தியாவின் காசி விஸ்வநாதரை ஒத்து இந்தக் கோவிலின் பிரதான கருவறையானது நான்கு பக்கங்களும் திறந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு பக்கங்களும் கண்ணாடிகளால் முடியவண்ணம் நான்கு பக்கங்களாலும் பார்த்து வழிபடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழா
தொகுஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்து முதல் சதுர்த்திக்கு அடுத்த நாளை முதலாம் நாளாகக் கொண்டு தொடர்ந்து பதின்மூன்று தினங்கள் அலங்கார உற்சவம் இடம்பெறும். இதன்போது எம்பெருமான் எம்பிராட்டி சமேதராக இரவு நேர பூசையில் உள்வீதி எழுந்தருளி பின்னர் வாகனத்திலே வெளிவீதி எழுந்தருளுவார். பதினொராம் திருவிழா திருக்கல்யாணம் இடம்பெற்று பன்னிரண்டாம் திருவிழா சுவாமி கிராம ஊர்வலம் செய்வார். தொடர்ந்து பதின்மூன்றாம் நாள் வைரவர் மடையுடன் அலங்கார உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
இந்தக் கோவிலின் 13 ஆம் நாள் திருவிழா நிறைவடைந்த மறுநாள் பண்டாரிகுளம் முத்துமாரி அம்மன் கோவிலின் 17 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். இதேவேளை பண்டாரிகுளம் குளக்கட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவிழா முடிந்த 2, 3 நாட்களில் உக்குளாங்குளம் சிவன் கோவில் திருவிழா ஆரம்பமாகும்.
ஒவ்வொரு மாதமும் இரண்டுமுறை பிரதோஷ கால சாயுங்கால பூசைகள் சிறப்பாக இடம்பெற்று, பூசைகள் நிறைவு பெற்றவுடன் மகேஸ்வர பூசையும் இடம்பெறும். அதேபோல கேதாரகௌரி விரதமும் சிறப்பாக இருபத்தொரு நாட்கள் இடம்பெறும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ukkulankulam Sivan Kovil". EverybodyWiki Bios & Wiki (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-29.