முதன்மை பட்டியைத் திறக்கவும்

உடற்கல்வி என்பது உடலியக்க செயல்பாடுகள் மூலம் உடல் சார்ந்த திறன்களை வெளிக்கொணர்தல் ஆகும். உடல் மற்றும் வயதிற்கு ஏற்றாற் போல் திட்டமிட்டு தொடர்ச்சியாக உடலியக்க செயல்பாடுகளில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியமாக வைத்தல் என்பதாகும்.

பொருளடக்கம்

நோக்கம்தொகு

உடற்கல்வியின் நோக்கங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பது, உள்ளத்தின் ஆற்றலை மேம்படுத்துவது, உணர்வுகளைக கட்டுப்படுத்துவது, சமுதாயத்தோடு இணைந்து வாழ வழி செய்வது ஆகியன ஆகும். இத்துடன் மனிதர்களின் ஆளுமைத் திறனையும் மேம்படுத்ததுகிறது.

குறிக்கோள்கள்தொகு

உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படுதல்தொகு

உடலியக்க செயல்பாடுகளின் மூலம் உடலுறுப்பு மண்டலங்களான சுவாச மண்டலம், இரத்தஓட்ட மண்டலம், ஜீரணமண்டலம், மற்றும் கழிவு மண்டலங்களின் செயல்பாடு மேம்படுகிறது

நரம்பு மற்றும் தசை இசைந்த செயல்பாடு மேம்படுதல்தொகு

உடலசைவு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் உடல் மற்றும் அறிவு ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மேம்படுகிறது

உணர்வு மேம்படுதல்தொகு

குழு விளையாட்டுகளில் ஈடுபடுதலின் மூலம் ஒற்றுமை, தலைமை பண்பு, தகவல் பரிமாற்றம், கீழ்ப்படிதல் போன்ற பண்புகள் மேம்படுகிறது. இதன் மூலம் நம் எதிர் கொள்ளும் சூழல்களில் உணர்வுகள் கையாளப்படுகிறது.

ஆளுமை மேம்படுதல்தொகு

உடலியக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனிதர்களின் உடல், உள்ளம் மற்றும் உணர்வு சார்நத திறன்கள் மேம்படுகிறது. இதனால் அவர்களின் ஒட்டு மொத்த செயல்திறன் மேம்பட்டு ஆளுமைதிறன் வளர்கிறது.[1]

மேற்காேள்கள்தொகு

  1. உடற்கல்வி,யோகா மற்றும் உடல்நலக்கல்வி வளநூல் (ஆசிரியர்கல்வி பட்டப்பயிற்சி ) தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை 600006
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்கல்வி&oldid=2754705" இருந்து மீள்விக்கப்பட்டது