உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை

உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை (Implantable Collamer Lens) என்பது பார்வை குறைபாடுகளைச் சரி செய்யும் சிகிச்சைக்கு உதவும் லென்ஸ் ஆகும். ஆங்கிலத்தில் இதனைச் சுருக்கமாக ICL என்று அழைப்பார்கள். கண்ணின் மேற்புறத்தில் சென்று பாரம்பரியத் தொடர்பு லென்சுகள் போலல்லாமல், இவை (ஐசிஎல்) [1] கருவிழி (கண் வண்ண பகுதி) மற்றும் இயற்கை லென்சுக்கு இடையே கண்ணுக்குள்ளே பொருத்தப்படும். லென்ஸ் கண் உள்ளே நிரந்தரமாக இருக்கும். எனினும், இந்த லென்சைப் பொருத்திக்கொண்ட பின்னர் ஒருவரது பார்வை காலப்போக்கில் மாறுகிறது அல்லது குறைகிறது என்றால், லென்சை எளிதாக நீக்க அல்லது அதற்குப் பதிலாகப் புதிய லென்சைப் பொருத்த முடியும்.

ஐசிஎல் பற்றிதொகு

உள்விழி லென்சினைக் (IOL) கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தி நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைத் தழுவிப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய முயற்சி அல்லது கண்டுபிடிப்பு உட்பொருத்தக்கூடிய காலமர் (Collamer) கண்ணாடி வில்லை ஆகும்.

ஐசிஎல் (ICL) நடைமுறைக் கண்புரை அறுவை சிகிச்சையில் இருந்து வேறுபடுகிறது. கண்புரை முறையில் இயற்கை லென்ஸ் கண் விழியில் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக IOL வகை லென்ஸ் பொருத்தப்படும் ஆனால் ஐசிஎல் (ICL) காலமர் லென்ஸ் இயற்கை லென்ஸ் முன் வைக்கப்படும்.

பொதுவாக லேஸிக் சிகிச்சைக்குத் தகுதி இல்லாதவர்கள் இந்த ICL சிகிச்சையைச் செய்து கொள்ள முடியும்.

செயல்முறைதொகு

 • லென்ஸ் பொருத்தப்படுவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் முன், கண் மருத்துவர் கண் முன்னறை இடையே லென்ஸ் வைப்பதற்கான போதிய இடவசதி உள்ளதா என்று சோதித்து முடிவுசெய்வார்.
 • அறுவை சிகிச்சை நாளில், கண்களில் அழுத்தத்தை குறைக்க மயக்க மருந்து இடப்படும். ஆனாலும் சிறிது கண் அழுத்தத்தை உணர முடியும். லென்சை நிலைப்படுத்த கண்விழியில் ஒன்று அல்லது இரண்டு சிறிய துளைகள் மருத்துவர் உருவாக்க கூடும்.
 • ஒரு சிறிய கீறல் மூலம் லென்ஸ் கண்விழியின் உள்ளே செலுத்தப்படும்.
 • மடித்த நிலையில் லென்ஸ் மெதுவாக கண்ணுக்குள். லென்ஸ் நான்கு மூலைகளிலும் கருவிழியின் பின்னால் வைக்கப்படும். இந்த லென்ஸ் மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாது.
 • மருத்துவர் தொற்று மற்றும் வீக்கம் தடுக்க உதவும் கண் சொட்டு மருந்து கொடுப்பார் மருத்துவர் அறிவுரைப்படி பல நாட்கள் இந்த கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தவேண்டும்.

ஐசிஎல் பொருத்திக்கொள்ளத் தகுதிகள்தொகு

 • 21 முதல் 45 வயது வரைக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • தீவிர கிட்டப்பார்வை உள்ளவராக இருக்க வேண்டும் .
 • லேசிக் சிகிச்சைக்குத் தகுதி இல்லாதவராக இருக்க வேண்டும். அதாவது cornea மெல்லியதாக இருக்க வேண்டும்.

மேலும் காண்கதொகு

 1. தொடு வில்லை (Contact Lens)
 2. உள்விழி கண்ணாடி வில்லை (IOL Lens)

மேற்கோள்தொகு

 1. "Implantable Contact Lens". Sankara Nethralaya. பார்த்த நாள் 05 January 2015.

வெளியிணைப்புகள்தொகு