உணவு இயக்கம்

உணவு இயக்கம் என்பது உணவை வாங்க முடியாத ஏழைகளின் தேவைக்காக உணவுப்பொருட்களை பிறரிடம் கொடையாக பெற்று விநியோகிக்கும் குழுக்கள், தனிநபர்கள் அல்லது நிறுவனத்தால் நடத்தப்படும் தொண்டு அமைப்பாகும்.

பார்வை தொகு

 
ஒரு உணவு இயக்கத்தின் போது சேகரிக்கப்பட்ட அழுகாத உணவுப் பொருட்கள்.

உணவு இயக்கங்கள் உணவு வைப்பகங்களை வைத்து, குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ உணவை வழங்கும் தன்னார்வ அமைப்புகளாகும். இவை பெரும்பாலும் வீடற்ற மக்கள், பராமரிக்க யாருமற்ற முதியவர்கள், அனாதை இல்லங்கள், அகதிகள், இயற்கை பேரழிவுகளால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆகியோருக்கு உணவை விநியோகிக்கின்றனர்.

திறனாய்வு தொகு

தொண்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பலர் உணவு இயக்கங்களின் திறமையின்மை பற்றி விமர்சிக்கிறார்கள். அவசர உணவு வழங்குநர்கள் உணவுத் தொழிற்துறையில் உள்ள உபரி உணவுப் பொருட்களை அதிகப்படியான தள்ளுபடி விலையில், அதாவது 5% விலையில்கூட வாங்கலாம். இவ்வாறு குறைந்த விலையில் உணவு வாங்கினால், தன்னார்வலர்கள் உடல் ரீதியான உழைப்பு நன்கொடை செய்வதற்கு பதிலாக, அதே மதிப்புக்கு பண நன்கொடை செய்வதின் வழியாக, மிக அதிக அளவிலான உணவு பெற்று, மேலும் உணவு தொண்டு செய்யலாம்.[1]

பிரெட் ஃபார் சிட்டி கிரெக் ப்ளூம் அமைப்பு (Greg Bloom of Bread for the City) நன்கொடை உணவின் ஆரோக்கிய மதிப்பையும் அதன் ஊட்டச்சத்து குறித்து கவலை தெரிவித்தது.[1]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவு_இயக்கம்&oldid=3312633" இலிருந்து மீள்விக்கப்பட்டது